லண்டன் : இங்கிலாந்து அணியில் இப்போது தான் தன் 21வது ஒருநாள் போட்டியில் ஆடி இருக்கிறார் டாவிட் மலன்.
ஆனால், அதற்குள் அவரின் ரன் குவிப்பு, ஃபார்ம் மற்றும் செஞ்சுரி எண்ணிக்கை எல்லாம் மற்ற அணிகளை மிரள வைப்பதாக உள்ளது. அதிலும், உலகக்கோப்பைக்கு அனைத்து அணிகளும் தயாராகும் நிலையில், டாவிட் மலனின் ஃபார்ம் மற்ற அணிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தற்போது இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. உலகக்கோப்பைக்கான முன்னோட்டமாக இரு அணிகளும் இந்த தொடரில் பங்கேற்று உள்ளன. இந்த தொடரில் ஏற்கனவே, 54 மற்றும் 96 ரன்கள் அடித்து இருக்கிறார் டாவிட் மலன். இந்த நிலையில், நான்காவது ஒருநாள் போட்டியில் அவர் துவக்க வீரராக களமிறங்கினார். மற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களே எடுத்த நிலையில், மலன் அதிரடியாக 114 பந்துகளில் 127 ரன்கள் குவித்தார். அவர் 14 ஃபோர் மற்றும் 3 சிக்ஸ் அடித்து இருந்தார்.
அவரது அதிரடியால் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 311 ரன்கள் குவித்தது. அவரது ஆட்டத்தில் அணியின் 40 சதவீத ரன்களை அவரே அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப் போட்டியில் 1,000 சர்வதேச ஒருநாள் போட்டி ரன்களை அவர் கடந்தார். இது அவர் ஆடும் 21 வது ஒருநாள் போட்டி. வெறும் 21 இன்னிங்க்ஸ்களில் 1000 ரன்களை கடந்து இங்கிலாந்து அளவில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை ஜொனாதன் டிராட் மற்றும் கெவின் பீட்டர்சன் உடன் பகிர்ந்து கொண்டார்.
மேலும், 21 போட்டிகளில் தன் ஐந்தாவது சதத்தை பதிவு செய்தார். அவர் ஏற்கனவே 5 அரைசதங்களையும் அடித்து இருக்கிறார். அவரது ஒருநாள் போட்டி சராசரி 63 ஆகும். இவரது சராசரி சுப்மன் கில்ளை விட குறைவு தான். அப்படியானால், இவரது ஆட்டம் எப்படி ஆபத்தானது என்ற கேள்வி எழலாம். இதுவரை இவர் ஆடிய 21 போட்டிகளில் ஐந்து முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். அதாவது ஒன்று அடிக்காமல் அவுட் ஆவது, நின்று விட்டால் அடித்து துவம்சம் செய்வது. இதுதான் இவரது பாணியாக இருக்கிறது. இது கிட்டத்தட்ட இந்தியாவின் வீரேந்தர் சேவாக்கின் பாணி. அதன் காரணமாகவே இவரது விக்கெட்டை எடுக்கவே உலகக்கோப்பையில் மற்ற அணிகள் தனியாக திட்டமிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Source:mykhel
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments