நியூஸிலந்தில், சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கருவி ஒரு பெண்ணின் வயிற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
18 மாதங்களுக்கு முன், ஆக்லந்து நகர மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு சிசேரியன் (cesarean) அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்தது.
அப்போது 17 சென்ட்டிமீட்டர் விட்டத்தைக்கொண்ட Alexis retractor எனும் கருவி தாயின் உடலுக்குள் இருப்பது தெரியாமல் தையல் போடப்பட்டது.
பல மாதங்களாக அந்தப் பெண் மிகுந்த வலியை அனுபவித்தார்.
பல முறை மருத்துவரை நாடியும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை.
X-ray செய்தும் அந்தக் கருவி இருப்பது தென்படவில்லை.
ஒரு நாள் அதிகமான வலியை எதிர்நோக்கியபோது அந்தப் பெண் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றார்.
CT scan செய்ததில் உடலில் கருவி இருப்பது தெரியவந்தது.
பிறகு சிகிச்சை மூலம், அது உடனடியாக வெளியே எடுக்கப்பட்டது.
ஆக்லந்தின் மாவட்டச் சுகாதாரக் கழகம் நோயாளியின் உரிமைகளை மீறியுள்ளதாக நியூஸிலந்தின் சுகாதார, உடற்குறை துறைகளுக்கான ஆணையர் மொராக் மெக்டாவல் (Morag McDowell) குறிப்பிட்டார்.
பராமரிப்புத் தரநிலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதை அவர் சுட்டினார்.
அதனால் அந்தப் பெண் நீண்டகாலத்துக்கு துன்பத்தை அனுபவிக்க வேண்டியதாயிற்று என்றார் அவர்.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சுகாதாரக் கழகம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
இந்தச் சம்பவத்தைக் கையாளும் இயக்குநர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா என்பதை முடிவுசெய்வார் என்று CNN தெரிவித்துள்ளது.
Source:seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments