கொழும்பு: உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததாகவும், சுப்மன் கில்லின் ஆட்டம் சிறப்பாக இருந்ததாகவும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பின்னர், இந்திய அணிக்கு சரியான பாடத்தை கற்பித்துள்ளது வங்கதேச அணி. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்கள் சேர்த்தது. ஷகிப் அல் ஹசன் 80 ரன்களும் இளம் வீரர் ஹிர்தாய் 54 ரன்களும் விளாசினர். இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து கொண்டே இருந்தது. சுப்மன் கில் தவிர்த்து வேறு எந்த வீரரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவே இல்லை. உலகக்கோப்பை அணியில் உள்ள சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் உள்ளிட்டோர் மோசமான ஷாட் ஆட் ஆட்டமிழந்தனர். இறுதியாக 49.5 ஓவர்களில் இந்திய அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் வங்கதேசம் 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், உலகக்கோப்பையை மனதில் வைத்து சில வீரர்களுக்கு வாய்ப்பளித்தோம். அதற்காக எப்படி விளையாட வேண்டும் என்பதில் சமரசம் செய்து கொள்ளவில்லை. உலகக்கோப்பையில் விளையாடும் சில வீரர்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறோம். கடைசி நேரத்தில் அக்சர் படேல் சிறப்பாக பேட்டிங் செய்தார். ஆனால் சரியாக ஃபினிஷ் செய்ய முடியவில்லை. ஆனால் அவரின் ஆட்டத்தில் முயற்சியும், செயல்பாடும் சிறப்பாக இருந்தது.
அதேபோல் வங்கதேச பவுலர்களுக்கு நிச்சயம் பாராட்டு தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில் சிறந்த சதத்தை விளாசி இருக்கிறார். அவர் என்ன செய்கிறோம் என்பதை நன்றாக அறிந்திருக்கிறார். அதேபோல் அணியை வெற்றிபெற வைப்பதே நோக்கம் என்பதை சதம் மூலமாக வெளிப்படுத்திவிட்டார். கடந்த ஓராண்டில் சுப்மன் கில் ஆட்டத்தின் முன்னேற்றத்தை பார்க்க வேண்டும். சுப்மன் கில்லை பொறுத்தவரை விருப்பமிருந்தால் பயிற்சி செய்யலாம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.
Source:mykhel
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments