Ticker

6/recent/ticker-posts

வெறும் 320 பேர் மட்டுமே வசிக்கும் உலகின் சின்னஞ்சிறு நாடு... சுவாரஸ்ய தகவல்கள்...


வெறும் 14 கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒரு நாடு இந்த உலகில் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அத்தகைய சிறிய நாடு இந்த உலகில் உள்ளது.  
இது அதன் சொந்த கொடி, சொந்த நாணயம், எல்லைகள் மற்றும் 297 பேரை ஆளும் இளவரசி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த நாட்டை பற்றிய சுவாரஸ்ய தகவகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

உலகில் நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. அது போன்ற விசயங்களைப் பற்றி  நாம் கேள்விப்படும் போது ​​ஆச்சரியமாக இருக்கும். உலகின் மிகச் சிறிய நாடுகள் என்று வரும்போது, ​​சான் மரினோ, வாடிகன் சிட்டி போன்ற நாடுகளின் பெயர்கள் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் அவற்றையெல்லாம் விட மிகச் சிறிய 14 சதுர கிலோமீட்டரில் மட்டுமே ஒரு நாடு இருக்கிறது தெரியுமா?. இந்த சிறிய நாட்டின் பெயர் செபோர்கோ. கடந்த 1000 ஆண்டுகளாக சுதந்திர நாடு என்ற அந்தஸ்து பெற்றுள்ளது இந்த நாடு. இது சிறியதாக இருந்தாலும், இங்கு வருவதற்கு பாஸ்போர்ட் தேவையில்லை என்று அர்த்தமில்லை. செபோர்கோ நாட்டுக்குள் செல்வதற்கும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

இந்த நாடு சுதந்திரம் பெற்று 1000 ஆண்டுகளுக்கு முன்புதான் அதன் உரிமையாளரை இளவரசராக போப் அறிவித்தார். செபோர்கா 1719 ஆம் ஆண்டில் விலைக்கு விற்கப்பட்டது. 1800-ல் இத்தாலி ஒருங்கிணைக்கப்பட்ட போது, ​​மக்கள் இந்த கிராமத்தை மறந்துவிட்டனர். 1960 ஆம் ஆண்டில், செபோர்கா முடியாட்சி முறைப்படி இத்தாலிக்குள் வரவில்லை என்பதை மக்கள் உணர்ந்தனர். ஆனால் செபோர்கோவின் இளவரசராக ஜார்ஜியோ 1 என்பவர் தன்னை அறிவித்துக் கொண்டார். அடுத்த 40 ஆண்டுகளில், அரசியலமைப்பு, நாணயம், முத்திரை மற்றும் தேசிய விடுமுறை ஆகியவற்றை உருவாக்கினார்.

வெறும் 320 பேர் கொண்ட இந்த நாட்டில் இளவரசர் மார்செலோ அடுத்த மன்னரானார். இளவரசி 297 பேரை ஆட்சி செய்கிறார்தற்போது, ​​நினா என்பவர் செபோர்காவின் இளவரசியாக உள்ளார் . அவர் 2019-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், தான் இளவரசி ஆவேன் என்று நினைத்துக் கூடப்பார்த்ததில்லை என்று கூறியுள்ளார். இங்கு செபோர்கா லுய்ஜினோ நாணயம் புழக்கத்தில் உள்ளது. இது ஆறு அமெரிக்க டாலர்களுக்கு சமம். அதாவது இந்திய மதிப்பில் ஒரு செபோர்கோ நாணயம் 499 ரூபாய். அழகான பழைய வீடுகள் மற்றும் உணவகங்கள் இங்கு இருப்பதால் சில சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

SOURCE:news18


 



Post a Comment

0 Comments