Ticker

6/recent/ticker-posts

பன்றி ரத்தம் குடித்தால்தான் திருமணம் - விநோத சடங்கை பின்பற்றும் பழங்குடி மக்கள்!


பம்பரமாய் சுற்றிசுழலும் நவீன உலகத்திற்கு ஏற்றார் போல மக்கள் அனைவரும் தங்களின் வாழ்க்கை முறையை மாற்றி வருகின்றனர். 
 
ஆனால் இந்தியாவில் வாழ்ந்து வரும் பலவகையான பழங்குடியினர் இன்றளவிலும் தங்களுக்கான மரபு மாறாமல் தொன்றுதொட்டு அவர்களின் பாரம்பரியத்தை கடைபிடித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வியல், அவர்களின் சம்பிரதாயங்கள், திருமண முறை, அன்றாட வாழ்க்கை முறை என அனைத்தும் முற்றிலும் நம்மில் இருந்து வேறுபட்டிருக்கும். பல விஷயங்கள் நம்மை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்திருக்கும். அப்படி இன்றும் விசித்திர பாரம்பரியத்தை கடைபிடித்து வரும் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் வாழும் கோண்ட் பழங்குடியினரைப் பற்றித்தான் நாம் பார்க்கப்போகிறோம்..

பொதுவாக இந்தியாவில் மருமகன்களுக்கு எப்போதுமே மாமியார் வீட்டில் ஏகபோக வரவேற்பு அளிப்பது ஒரு வகையான பாரம்பரிய முறையாக பார்க்கப்படுகிறது. மருமகனை கவனிப்பதில்தான் நம் மகளின் நலன் உள்ளது என்று பலரும் மருமகனை விழுந்து விழுந்து உபசரணை செய்வார்கள். மருமகனுக்கு பலவகையில் உணவுகள் பரிமாறுவது, மருமகனின் தேவைகளை பூர்த்தி செய்வது, மருமகன் மனம் கோணாமல் பார்த்து பார்த்து நடந்து கொள்வது என இந்தியாவில் மருமகனை ஒரு தெய்வ பிறவியை போல் நடத்துவார்கள்.

ஆனால் இந்த கோண்ட் பழங்குடியினர் தங்களின் மருமகன்களை நடத்தும் விதத்தை கேள்விப்பட்டால், அதுவும் முக்கியமாக  காதல் திருமணம் செய்யும் மருமகன்களை நடத்தும் விதத்தை கேள்விப்பட்டால்..  நிச்சயம் நீங்க வடிவேலு பாணியில் "அய்யயோ இது என்ன ஒரு புது டைப்பாவுல இருக்கு.." என்பதை போல் ஷாக் ஆவீர்கள். ஆம்..  மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் வாழும் கோண்ட் இன பழங்குடியின மக்கள் உலகின் மிகவும் பழமையான பழங்குடியினராக இன்றும் கருதப்படுகின்றனர்.

பல ஆண்டாண்டு காலமான அவர்களின் பாரம்பரியத்தை இன்றும் பிசுராமல் தங்களின் முழு மனதோடு பின்பற்றிவருகின்றனர். முக்கியமாக திருமணம் தொடர்பான விதிகள். பொதுவாக நடக்கும் திருமணங்களை போல இவர்களின் திருமணங்களிலும் ஆடல், பாடல் உண்டு. ஆனால், இவர்கள் பின்பற்றும் விதிகள் தான் அதிர்ச்சியடவைக்கிறது. குறிப்பாக ஆணும், பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டால் இது கட்டாயம்.

அதாவது பெண்ணை ஆண் காதலித்து திருமணம் செய்துகொள்ள விரும்பும் பட்சத்தில் முதலில் அந்த மணமகன் மாமனாரை இம்ப்ரெஸ் செய்ய வேண்டுமாம். ஆம்.. மாமனாருக்கு சொந்தமான நிலத்தில் இறங்கி வேலைசெய்ய வேண்டுமாம்.. பையன் உண்மையிலேயே கடின உழைப்பாளிதான் என்று தோன்றினால் மட்டுமே அவர்கள் க்ரீன் சிக்னல் காட்டுவார்களாம். அதே போல் "என் மகளுக்காக பையன் எதை வேண்டுமானாலும் செய்வான்" என்பதை நிரூபிக்க பன்றியின்  பச்சை ரத்தத்தை அப்டியே குடிக்க சொல்வார்களாம். இந்த பலப்பரீட்சைகளில் மாமனாரின் மனம்கவர்ந்தாள் மட்டுமே கெட்டிமேளமாம் இல்லையென்றால் 'நோ' சொல்லிவிடுவார்களாம்.

இந்த கோண்ட் பழங்குடி மக்கள் பெரும்பாலும் வேட்டையாடுவதன் மூலம் வாழ்கின்றனர். அவர்களின் உணவில் இறைச்சிக்கும் மீனுக்கும் முக்கிய இடமுண்டு. பெண்கள் சேலையும், ஆண்கள் வேட்டி, கஞ்சியும் அணிகிறார்கள்.

Source:news18


 



Post a Comment

0 Comments