Ticker

6/recent/ticker-posts

கோழிகளுக்கு இசை நிகழ்ச்சி


நியூசிலந்தில் பல்லிய இசைக் குழு வித்தியாசமான நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.

 பார்வையாளர்கள் மனிதர்கள் அல்லர்...ஆயிரக்கணக்கான கோழிகள்.

இசை...பொதுவாகக் கேட்கப்படும் பாரம்பரிய இசை அல்ல...கோழிகளுக்காக உருவாக்கப்பட்ட படைப்பு.

எந்த வேலியும் இல்லாமல் கோழிகளை வளர்க்கும் Bostock Brothers பண்ணை பல ஆண்டுகளாக நிகழ்ச்சியை நடத்துவதாக The Guardian செய்தி நிறுவனம் சொன்னது.

இசையைக் கேட்டால் கோழிகளின் நலன் மேம்படும் என்று பண்ணை நம்புகிறது.

அதற்காகவே சிறப்பு இசை உருவாக்கப்பட்டது.

கோழிகளின் முன்னிலையில் பலமுறை வாசித்த பிறகே அவற்றுக்கு எந்தவகை இசை அதிகம் பிடித்திருந்தது என்று அறிந்ததாக இசைக் குழு சொன்னது.

இசையில் கோழிகள் அன்றாடம் அதிகம் கேட்கும் சத்தங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

கோழிகளுக்கு வாசித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக இசைக் குழு கூறியது.

இசைக்கருவிகளை வாசிக்கத் தொடங்கியவுடன் கோழிகள் ஒன்றுகூடியதாக அது சொன்னது.

Source:seithi


 



Post a Comment

0 Comments