ஏதாவது ஒன்றைச் செய்து பிரபல்யம் அடைய நினைப்பது, மேற்கத்திய நாடுகளுக்குப் பழகிப்போன ஒரு விடயமாகும். அந்த வகையில் ஹிஜாப் சிலை ஒன்றை வடிவமைத்த ஒருவர் அதன் மூலம் தன்னைப் பிரபல்யப் படுத்திக் கொள்ள விழைந்திருப்பது அபூர்வமானதாகும்!
'ஸ்மெத்விக்' என்பது இங்கிலாந்தின் மேற்கு மிட்லண்ட்ஸில் அமைந்துள்ள தொழில்துறை சார்ந்த சுமார் 15,246 பேர் வாழுகின்ற ஒரு நகரமாகும். இது மேற்கு பெர்மிங்கம்மிலிருந்து ஆறு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.
இங்கு வடிவமைக்கப்பட்ட உலகின் முதல் ஹிஜாப் அணிந்த சிலை ஒன்று அடுத்த மாதம் திறப்பு விழாக் காணவிருக்கின்றது.
இதனை உருவாக்கி, பொது வெளிக்குக் கொண்டு வந்துள்ளவர், சிலை வடிவமைப்பாளர் லியூக் பெரி என்பவராவார்.
இது பற்றி அவர் குறிப்பிடுகையில், "இந்தப் பகுதியில் இன்னாரும் வாழ்ந்தார்கள் என்பதன் அடையாளத்திற்காக அனைத்து தரப்பு மக்களிடமும் குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற ஹிஜாப் சிலையை இங்கு வைக்க விரும்பினேன்" எனக் கூறுகிறார்.
ஹிஜாப் அணியும் பெண்களைக் கொண்டாடும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட உலகின் முதல் சிலையான இது, 16 அடி உயரமும், ஒரு டொன் பாரமும் கொண்டதாகும்.
இதன் காலடியில் காணப்படும் மதிப்புமிகு வாசகம், "தான் விரும்பும் உடையை அணியும் உரிமையும் அதற்கான மதிப்பும் ஒரு பெண்ணுக்கு கொடுக்கப்பட வேண்டும்; அவளது உண்மையான வலிமை அவளது மனதிலும் சிந்தனையிலும் தான் உள்ளது" என்பதாகும்.
ஹிஜாப் என்பது பாரம்பரியமாக முஸ்லிம் பெண்கள் பிற ஆண்கள் முன்னிலையில் அணியும் ஒரு முக்காடாகும்.
இது நமது கலாச்சார உடையா, இது நமக்குத் தேவையா என்பதனைவிடவும், அதனை விரும்பி அணியும் மக்கள் நம்மோடு வாழ்கின்றார்கள்; அவர்களுக்கும் பாதுகாப்புக் கொடுத்து, மரியாதையுடன் நடத்துவது மனித இனத்தின் கடப்பாடாகும் என்பதை உலகிற்குப் புரிய வைப்பதாகும்.
இஸ்லாத்தில் சிலை வடிப்பிற்கு அங்கீகாரம் இல்லாத
நிலையில், முஸ்லிம்களுக்கு மத்தியில் இந்த 'ஹிஜாப் சிலை' எவ்வகையில் வரவேற்புப் பெறப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments