Ticker

6/recent/ticker-posts

எகிப்தைப் பூர்வீகமாகக் கொண்ட இஸ்ரவேலர்கள் பலஸ்தீனுக்குள் நூழைந்தது எப்படி?

 மத்திய கிழக்கு யுத்தமும் பாலஸ்தீனின் எதிர்காலமும்! (3) 


1894ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தில், பிரெஞ்சு இராணுவத்தில் ஆல்பிரட் ட்ரேஃபஸ் என்ற யூத அதிகாரி மீது பொய்க்குற்றம் சாட்டப்பட்டு,தேசத்துரோகக் குற்றவாளி என்று அடையாளப் படுத்தப்பட்ட விடயம்   வரலாற்றில் “ட்ரேஃபஸ் விவகாரம்”  என்று  கூறப்படுகின்றது.  
இந்த நிகழ்வு, சிதறி வாழ்ந்துவந்த யூத மக்களிடையே சீற்றத்தைத் தூண்டி, தமது அடையாளத்தை காப்பாற்ற, பூர்வீகப் பூமிக்குச் சென்று, யூத கலாசாரத்தை மீட்டெடுப்பதற்கான யோசனையை ஊக்குவிக்கக் காரணமாகியது.

ட்ரேஃபஸ் விவகாரமும் ஹெர்ஸ்லும்


ட்ரேஃபஸ் விவகாரத்திற்குப் பிறகு ஆஸ்திரியாவைச் சேர்ந்த யூதபத்திரிகையாளரும், அரசியல் ஆர்வலருமான ஹெர்ஸ்ல், யூத மக்கள் 'சொந்தமாக தேசம் ஒன்றினைக் கொண்டிருக்கவில்லை என்றால் உயிர்வாழ முடியாது' என்ற எண்ணக் கருவைத் தனக்குள் ஏற்பத்தி, அவர் காலத்தில் வாழ்ந்த யூதர்கல் மத்தியில் பரப்பி, பாலஸ்தீனத்தை  யூததாயகமாக அரசியல் அங்கீகாரம் பெறக்கோரிய வியூகம் ஒன்றை, துண்டுப் பிரசுரம் மூலம் வெளியிட்டு விட்டு, 1904ம் ஆண்டில் இறந்துவிடுகிறார்.

1914ம் ஆண்டு தொடங்கி 1918ம் ஆண்டு வரை நடந்த முதலாம் உலகப் போர்,  வரலாற்றின் உலகளாவிய சண்டைகளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய ஒன்றாகும்.  ஐரோப்பிய, ரஷ்ய, அமெரிக்க மற்றும் உதுமானியப் பேரரசும் இதில் கலந்து கொண்டன. ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, பசிபிக் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் சண்டைகள் நடைபெற்றன.

சண்டைகளில் 90 இலட்சம் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும்,  அதிகமான  இராணுவ வீரர்கள் காயம் அடைந்ததாகவும், அதே நேரத்தில் இராணுவ நடவடிக்கை, பட்டினி, மற்றும் நோய்கள் காரணமாக  50 இலட்சம் குடிமக்களும் இந்தப்போரில்  இறந்ததாகவும் கூறப்படுகின்றது. 

உதுமானியப் பேரரசின் வீழ்ச்சி

மத்திய கிழக்குப் பகுதியைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த  உதுமானியப் பேரரசு முதலாம் உலகப் போரில் வீழ்த்தப்பட்டது மட்டுமல்லாது, இனப்படு கொலைகள் மற்றும் 1918ம் ஆண்டில் ஏற்பட்ட  தொற்றுப் பரவல் காரணமாகவும் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் இறந்தனர்.   இதனால் உதுமானியப் பேரரசு, 1922 நவம்பர் 17ம் திகதி கலைக்கப்பட்டு, அதன் பிறகு அதன் கடைசி சுல்தான் ஆறாம் முகம்மது நாட்டை விட்டும் வெளியேறிய நிலையில்  பாலஸ்தீனம்  உட்பட மத்திய கிழக்கு முழுவதும், பிரித்தானியாவின் ஆளுகைக்குள் வந்தது.

பாலஸ்தீனம் முழுவதிலும் அரபுக்களே நெடுங்காலமாக வாழ்ந்துவந்த நிலையில், இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் பெரும்பான்மையினராகவும், யூத, கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராகவும்  அங்கு வாழ்ந்து கொண்டிருந்தனர். 

இவ்வேளையில்தான் உலகில் ஆங்காங்கே சிதறி வாழ்ந்த யூதர்கள் பலஸ்தீனப் பகுதியைத்   தங்களுடைய பூர்வீக மண்ணாகக் கருதி, அங்கு குடியேறப் பிரயத்தனங்கள் செய்தனர்.  

இவர்கள் குடியேறுவதற்கு, பெரும்பான்மையாக வாழ்ந்துவந்த அரபுக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பனூ இஸ்ராயீல்கள்

இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இரு மனைவிமார்கள்; அவர்களுள், ஸாரா மற்றும் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு மகனாகப் பிறந்தவரான இஸ்ஹாக் (அலை) அவர்களது மகன் யஃகூப் (அலை) அவர்களிலிருந்து உருவான சந்ததியினரே 'பனூ இஸ்ராயீல்கள்'; பிற்காலத்தில் இவர்களே "இஸ்ரவேலர்கள்" என்று அழைக்கப்பட்டானர்.

நபி யஃகூப் (அலை) அவர்கள் எகிப்து தேசத்தைச் சேர்ந்தவராக இருந்ததால், எகிப்து தேசமே யஹூதிகளான 'இஸ்ரவேலர்'களின் பூர்வீக மண்ணாக  இருக்க வேண்டுமே தவிர, பாலஸ்தீனம் அவர்களின் பூர்வீகமல்ல.  

இஸ்ஹாக் (அலை), அவர்களின் மகன் யஃகூப் (அலை), அவர்களின் மகன் யூஸுப் (அலை), மூஸா (அலை), ஹாரூன் (அலை), யூஷஃ (அலை), தாவூத் (அலை), சுலைமான் (அலை), ஈஸா (அலை), ஸகரிய்யா (அலை), யஹ்யா (அலை) )போன்ற அதிகமானவர்களை பனூஇஸ்ராயீல் களிலிருந்தே அல்லாஹ் தனது தூதர்களாகத் தேர்ந்தெடுத்தான்; யூதர்கள்- ஈஸா (அலை), ஸகரிய்யா (அலை), யஹ்யா (அலை), முஹம்மத் (ஸல்) ஆகியோரை இறைதூதர்களாக ஏற்றுக் கொள்வதில்லை.

கிறிஸ்தவர்கள் - முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர, மற்ற அனைவரையும்  இறைதூதர்களாக   ஏற்றுக் கொள்கின்றனர். முஸ்லிம்கள் திருக்குர்ஆனில் (2:285) அல்லாஹ் குறிப்பிட்டது போன்று, அவனது தூதர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்டாமல்  அனைவரையும் இறைதூதர்களாக எற்றுக் கொள்கின்றனர்.

இஸ்ரேல் உதயம்

உதுமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், பாலஸ்தீனம்  உட்பட மத்திய கிழக்கு முழுவதும், பிரித்தானியாவின் ஆளுகைக்குள் வந்தபோது உலகில் சிதறி வாழ்ந்துகொண்டிருந்த யூதர்களுக்கு, "தேசியப் பகுதி" ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை, உலக நாடுகள் பிரித்தானியாவிடம் ஒப்படைத்தன. 

தனக்கு ஒப்படைத்த பொறுப்பை நிறைவேற்றும் நோக்கில், பாலஸ்தீனத்திலிருந்து பிரித்தானியா தனது ஆட்சியையும், இராணுவத்தையும்  திரும்பப் பெற்றுக் கொண்டதும், இஸ்ரேல் என்ற  நாடு, 1948 மே மாதம் 14ம் திகதி உருவானது! சியோனிசத்தின் எழுச்சிதான் பலஸ்தீனத்துக்குள் பாரிய யூதக் குடியேற்றத்திற்கு வழிவகுத்தது.

1882 முதல்  நாடற்ற நிலையில் அலைந்து கொண்டிருந்த 75,000 யூதர்கள் அங்குமிங்குமாக  இடம்பெயர்ந்து, முதலாம் உலக யுத்த காலத்தின்போதும் தடுமாறி வாழ்ந்தனர்.  அவர்களுள் 1939ல் 57% பேர் ஐரோப்பாவில் வாழ்ந்தபோதிலும், இரண்டாம் உலகப் போரின் முடிவில், 35% பேர் மட்டுமே ஐரோப்பிய நாடுகளில் வசித்து வந்தனர். 

பாலஸ்தீனத்து நில ஆக்ரமிப்பு

1948ம் ஆண்டில் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட
பின், அங்குமிங்குமாகச் சிதறிவாழ்ந்த யூதர்களை  
பாலஸ்தீனத்து நிலங்கள் ஆக்ரமிக்கப்பட்டு, கட்டங் கட்டமாகக் குடியேற்றப்பட்டனர்.

இதனால், பெரும்பாலான பாலத்தீனியர்கள்  அகதிகளாயினார். அவர்களின் சந்ததியினர்  இன்றும் காஸா, மேற்குக் கரை, அண்டை நாடுகளான ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானிலும் வாழ்கின்றனர்.

ஆனால் இந்தப் பலஸ்தீன அகதிகளோ, அவர்களின் சந்ததியினரோ அவர்களின் பூர்வீக களுக்குத் திரும்புவதற்கு இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. அப்படி அனுமதித்தால், அதுவே  இஸ்ரேல் யூத நாடாக இருப்பதற்கான அச்சுறுத்தலாக  அமைந்துவிடும் என இஸ்ரேல் அஞ்சுகிறது.

1947களில் சுமார் ஒரு இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டிருந்த இஸ்ரேல் நாடு, இப்போது 93  இலட்சத்தையும் தாண்டி விட்டது.

பாலஸ்தீன மண்ணை அபகரித்து, அதற்கு இஸ்ரேல் என்று பெயரிட்டுக் கொண்டு, உலக வல்லரசுகளின் செல்லப்பிள்ளையாக இருப்பதனால், அது எது செய்தாலும், பெரும்பாலான நாடுகள் மட்டுமன்றி, உலகில் ஐக்கியத்தை ஏற்படுத்தவென உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் கூட, அதற்கு ஜால்ரா போடுகின்றன்றனவே தவிர, தட்டிக்கேட்கவோ சமாதானத்தை ஏற்படுத்தவோ முனைவதில்லை என்பது வருந்துதற்குரிய விடயமாகும். 

செம்மைத்துளியான்


 



Post a Comment

0 Comments