ஒரு பாலஸ்தீனிய-அமெரிக்க பெண் மற்றும் அவரது இளம் மகன் மீதான தாக்குதலில் கொலை,
கொலை முயற்சி மற்றும் வெறுப்புக் குற்றம்
ஆகிய குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள ஒரு நடுவர் மன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டதைத்
தொடர்ந்து குற்றமற்றவர் என்று தீர்ப்பு வளங்கியுள்ளது.
71 வயதான ஜோசப் சுபா, ஆறு வயது வாடியா அல்-ஃபயூமைக் கத்தியால் குத்தியதாகவும்,அவரது தாய் ஹனான் ஷாஹினைக் (அக்டோபர்14)காயப்படுத்திய தாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் பாலஸ்தீனிய முஸ்லிம்கள் என்பதாலும்,இஸ்ரேலுக்கு எதிரானவர்கள் என்ற
காரணத்தினாலும் சிறுவனைக் கொலை செய்து, தாயை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம்
சாட்டப்பட்ட ஜோசப் சுபா ,குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளதானது ,அமெரிக்கா முஸ்லீம்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோபைடனின் ஆட்சியில் அமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான விரோதப் போக்கு நாளுக்கு
நாள் அதிகரித்து வருகின்றது.
பைடனின் இஸ்ரேலுக்காண ஆதரவு என்பது வெறும் நண்பனுக்கு கொடுக்கின்ற ஆதரவாக நினைக்க வேண்டாம். முஸ்லிகளுக்கு எதிரான ஆதரவு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
மத்திய கிழக்கு நாடுகள், சீனா,ரஷ்யாவுடன் உறவைப் பலப்படுத்தும் இச்சந்தர்ப்பத்தில் அமெரிக்கா மத்திய கிழக்கில் மீண்டும் நுழைய இந்த யுத்தம் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானதாக
கருதப்படுகின்றது.
ஈராக் போர் மூலம் மத்திய கிழக்கில் நுழைந்த அமெரிக்காவுக்கு,இன்று பெரும் அச்சுறுத்தலாய் இருப்பது,ரஷ்யா,சீனாவின் மத்திய கிழக்கு வருகைதான்.
அமெரிக்காவின் பொருளாதாரம் தொடர்ந்து
வீழ்ச்சி கண்டுவரும் நிலையில் அவர்களுக்கு
யுத்தத்தை தவிர மாற்று வழிகள் இல்லை.
அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்சசியடையும் போதெல்லாம் இந்த போர் தொடுக்கும் யுக்தியை பல ஆண்டுகளாக அமெரிக்கா செய்து வருகின்றதை பார்க்கின்றோம்.
லட்சக் கணக்கான மக்களை கொன்று குவித்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் ஈனச் செயலை தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கின்றது அமெரிக்கா.
ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்களை தூண்டிவிட்டு நாட்டில் கலவரங்களை ஏற்படுத்தி ,சமாதானத்தை நிலை நாட்டுவதாக போலி நாடகமாடி அந்த நாட்டுக்குள் அமெரிக்கா தந்திரமாக நுலைந்து ,ஆயுதங்களை
விற்பனை செய்வதை பல ஆண்டுகளாக பார்க்கின்றோம்.
அதாவது உலகப் பொலீஸ் காரர்களாக தன்னைக் காட்டிக்கொள்கின்றது அமெரிக்கா.
பல நாடுகளின் வீழ்ச்சிக்கு அமெரிக்காவின் இந்தக் கொள்கையே மூல காரணமாயிருக்கின்றது.
அமெரிக்காவின் இந்தக் கொடூர செயலை பல நாடுகள் தற்போது புரிந்துகொண்டுள்ளதால்,ரஷ்யா,
சீனாவுடனான தங்கள் உறவை பலப்படுத்துகின்றன.
இதனால் அமெரிக்கா மிகப்பெரும் ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் என்ற அச்சத்தில் இஸ்ரேல் -பாலஸ்தீன் யுத்தத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக தொடர்ந்தும் இருந்து வருகின்றதை காணக்கூடியதாய் இருக்கின்றது.
காசாவில் 8000 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருந்தும்,
யுத்த நிறுத்தத்தை ஆதரிக்காமல் இருப்பதானது அமெரிக்காவின் முஸ்லிம் விரோத மனப்பான்மை எந்த அளவு தீவிரமாக இருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது.
இஸ்லாமிய நாடுகளை மீண்டும் தன்பக்கம் இழுப்பதற்கான ஒரு தந்திரம்தான் இந்த காசா யுத்தம்.
அமெரிக்காவின் இந்த நரித்தனத்தில் இஸ்லாமிய நாடுகள் சிக்கிவிடக் கூடாது என்பதுதான் உலக முஸ்லிம்களின் உறுதியான கொள்கை யாயிருக்கின்றது.
இந்த யுத்தமானது ஹமாஸ் போராளிகளுக்கு எதிரானது மட்டுமல்ல அகில உலக முஸ்லிம்களுக்கும் எதிரான யுத்தமாக நாம் கருதவேண்டும்.
கொலை செய்யப்பட்ட குழந்தை பாலஸ்தீன் முஸ்லிம் என்ற ஒரே காரணத்தால் கொலை செய்தவனுக்கு விடுதலை கிடைத்துள்ளது.முஸ்லிம் என்றால் அமெரிக்கா நீதித்துறையில் நீதி மறுக்கப்படுகின்ற அவலத்தை இந்த ஒரு சம்பவத்தால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
"இனி முஸ்லிம்களுக்கு அமெரிக்காவில் இடமில்லை "என்பதை இந்தத் தீர்ப்பின் மூலம் சொல்லாமல் சொல்லுகின்றது அமெரிக்காவின் நீதித்துறை.
இஸ்லாமிய நாடுகள் இனிவரும் காலங்களிலாவது சொந்தக் காலில் நிற்கக் கூடிய வசதிகளை தயார் படுத்தவேண்டும்.
இது உலகளாவிய முஸ்லிம்களின் ஆசை.
கல்ஹின்னை மாஸ்டர்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
கட்டுரை