சமீப காலமாக பல்வேறு நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்திற்கு உண்மையாக அர்ப்பணிப்புடன் உழைத்த பணியாளர்களை கௌரவிப்பதில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.
குறிப்பாக பெரு நிறுவனங்களிலும் தற்போது இந்த நடைமுறையானது செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவருக்கு அளித்த பரிசை பற்றிய பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மார்கோஸ் அலன்சோ என்பவர் ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஹியூமன் இண்டர்பேஸ் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். தனது 10 ஆண்டுகால பணி நிறைவை ஒட்டி ஆப்பிள் நிறுவனம் அவருக்கு அளித்த நினைவுப் பரிசு ஒன்றை பற்றிய பதிவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த நினைவுப்பரிசானது முழுவதுமாக உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மிகவும் பளபளவென இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் லோகோவுடன், அவரது பெயர் மற்றும் பத்தாண்டு பணி காலத்தை நிறைவு செய்த தேதி ஆகிய அனைத்தும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ-இடமிருந்து தனிப்பட்ட குறிப்பு ஒன்றும் அதில் இடம்பெற்றுள்ளது. அந்த குறிப்பில் இந்த மைல் கல்லை எட்டியதற்காக வாழ்த்துக்கள். உங்களது கடின உழைப்பு மற்றும் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் அனைத்தையும் தாண்டி இதனை நீங்கள் வெற்றி கரமாக செய்து முடித்துள்ளீர்கள். உலகை சிறப்பாக மாற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முயற்சியில் உங்களது பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாகும். உங்களது இந்த பயணத்திற்கு ஆப்பிள் நிறுவனத்தின் அனைவரின் சார்பாகவும் நன்றி” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
10 years at Apple pic.twitter.com/YYQNMzCBgx
— Marcos Alonso (@malonso) October 28, 2023
அவர் பதிவேற்றம் செய்த இந்த பதிவு கிட்டத்தட்ட ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் “நான் ஆப்பிள் நிறுவனத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்வதற்கு 2 மாதங்கள் முன்னதாகவே வெளியேறியதை நினைத்து வருத்தமாக உள்ளது. ஆனாலும் இப்போதும் கூட எனது ஐந்தாண்டு பணி நிறைவின் போது ஸ்டீவ் ஜாப்ஸ் கையொப்பமிட்ட நினைவுப்பரிசு என்னிடம் இப்போதும் உள்ளது. அது எப்போதும் என்னுடைய இதயத்திற்கு நெருக்கமான ஒன்றாகும், வாழ்த்துக்கள்” என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
மற்றொருவரோ “இது கிட்டத்தட்ட பார்ப்பதற்கு யூடியூபின் பிளே பட்டன் போல உள்ளது. ஆனால் சப்ஸ்கிரைபர்களுக்கு எதிராக நீங்கள் அதிக ஆண்டுகள் அங்கு பணி புரிந்ததற்காக அதைவிட சிறப்பான ஆப்பிள் லோகோவை நீங்கள் பெற்றுள்ளீர்கள்” என்று கருத்தை பதிவு செய்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தால் தங்களது நிறுவனத்தில் 10 மற்றும் 20 ஆண்டுகளை நிறைவு செய்யும் பணியாளர்களுக்கு அவர்களது பணி நிறைவு ஆண்டு விழாவை ஒட்டி வழங்கப்படும் விருதுகள் மற்றும் நினைவுச் சின்னங்களில் பயன்படுத்தப்படும் அலுமினியம் உலோகமானது, மேக் மினி மற்றும் மேக் புக் ஏர் தயாரிக்க பயன்படுத்தும் அதே உலோகம் ஆகும்.
30 மற்றும் 40 ஆண்டு காலத்தை நிறைவு செய்யும் பணியாளர்களுக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்ட நினைவுச்சின்னம் அளிக்கப்படுகிறது.. 5 ஆண்டுகளை நிறைவு செய்த பணியாளர்களுக்கு சிஇஓ-வால் கையொப்பமிடப்பட்ட ஃபிரேம் செய்யப்பட்ட தகடு போன்ற நினைவு சின்னம் வழங்கப்படுகிறது.
Source:news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்