மக்கள் வீடுகளை முற்றுகையிடுவார்கள்: தமது கட்சிக்கே பகிரங்க எச்சரி்க்கை விடுத்த எம்.பி

மக்கள் வீடுகளை முற்றுகையிடுவார்கள்: தமது கட்சிக்கே பகிரங்க எச்சரி்க்கை விடுத்த எம்.பி

வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றாலும், முறையான பணி ஒழுங்கு இல்லாவிட்டால், ஆறு மாதங்களுக்கு முன்னர் மக்கள் தமது வீடுகளை முற்றுகையிடுவார்கள் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் கூறியுள்ளதாவது, “நினைவில் கொள்ளுங்கள், எங்களுக்கு சரியான ஒழுங்குமுறை ஒன்று இருக்க வேண்டும் இல்லையேல் நாங்கள் வெற்றி பெற்ற 6 மாதத்தில் மக்கள் எங்கள் வீடுகளுக்கு வருவார்கள்.

மக்களுக்கு விளக்க வேண்டும்
2019க்கு முன்பு இருந்த அரசியல் இன்று இல்லை அதனால் நாங்கள் வெற்றி பெற்றாலும் மாயாஜாலங்கள் செய்தாலும் எதுவும் செய்ய முடியாது.

இதை மக்களுக்கு விளக்க வேண்டும் இல்லையேல் ரணில் இருந்திருந்தாலே நன்றாக இருக்குமென நமது வீடுகளுக்கு தேடி வருவார்கள்” எனக் கூறியுள்ளார்.

ibctamil


 



Post a Comment

Previous Post Next Post