அமெரிக்காவின் நியூயார்க் நகரம் கடலுக்குள் செல்கிறதா? அதிர்ச்சியூட்டும் நாசாவின் ஆய்வு தகவல்

அமெரிக்காவின் நியூயார்க் நகரம் கடலுக்குள் செல்கிறதா? அதிர்ச்சியூட்டும் நாசாவின் ஆய்வு தகவல்


உலகின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக கருதப்படும் அமெரிக்காவின் நியூயார்க், கடலுக்குள் செல்வதாக நாசாவின் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இதற்கு மனித செயல்பாடுகளே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. 
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது , மனித செயல்பாடுகளால் நிலப்பரப்பின் உயரம் குறைவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. நிலத்தில் அதிக அளவு கட்டுமானங்களை ஏற்படுத்துதல், குறிப்பாக எந்தவொரு இடைவெளியும் இல்லாத அளவுக்கு கட்டுமானங்களை கட்டுதல் ஆகியவை புவி பரப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மித மிஞ்சிய கட்டிடங்களால் நிலப்பரப்பின் உயரம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த மாற்றங்கள் உடனடியாக நடந்து விடுவதில்லை. இதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகலாம். சராசரியாக பெரு நகர பகுதிகள் ஆண்டுக்கு 1.6 மில்லி மீட்டர் அளவுக்கு குறைந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சும் மோட்டார்களின் அதிக பயன்பாடு, மாசுபட்ட நீரை சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் ஊசி கிணறுகள் உள்ளிட்டவை முக்கிய காரணியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பூமியின் மாறிவரும் காலநிலை உலகெங்கிலும் உள்ள கடல்களை உயரத் தள்ளுவதாலும் பாதிப்பு ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அடிக்கடி ஏற்படம் வெள்ளங்கள், புயல்கள் உள்ளிட்டவையும் நிலத்தின் உயரம் குறைவதற்கு காரணமாக இருக்கலாம்.

நியூயார்க்கை பொருத்தளவில் இதனை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும். கடல் மட்டம் எதனால் உயர்ந்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். கடலோர பாதுகாப்பு மற்றும் உள் கட்டமைப்பில் அதிக முதலீடு செய்வதன் மூலம் எதிர்கால அடிப்படையில் நியூயார்க் நகரத்திற்கு பலன்கள் கிடைக்கும்.

Source:news18


 



Post a Comment

Previous Post Next Post