காசே தான் கடவுளப்பா, அந்த கடவுளுக்கும் அது தெரியுமப்பா என பாடல் பாடும் அளவிற்கு பணம் மனிதனின் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
பணம் பத்தும் செய்யும் என்றெல்லாம் சொல்கிறோம். அதனால் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் முடிந்தவரை பணம் சம்பாதித்து சுகபோகமாக வாழ வேண்டும் என்று கனவு காண்கிறோம். வறுமையில் வாழ்வதை யாரும் விரும்ப மாட்டார்கள். பணம் சம்பாதிக்கும் அளவுக்குப் படித்து, எப்படியாவது ஒரு வேலையை வாங்கி சுகபோக வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான் 90 விழுக்காடு மனிதர்களின் லட்சியமாக இருக்கிறது.
ஆனால் ஒருவர் தனது வாழ்க்கையில் பணத்தை பயன்படுத்தவே கூடாது என்ற வித்தியாசமான முடிவை எடுத்து அதன்படி பணத்தை பயன்படுத்தாமலே பதினைந்து ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். அவரைப் பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம். இந்த கதை இங்கிலாந்தில் வசிக்கும் மார்க் பாயில் பற்றியது. கடந்த 2008ஆம் ஆண்டிலேயே பணத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திய அவர், அன்றிலிருந்து பணமின்றி வாழ்ந்து வருகிறார். அவர் படித்தவர், எந்த வேலையும் செய்யக்கூடியவர் என்பது வேறு விஷயம். ஆனாலும் பணத்தை பயன்படுத்தாமல், அதற்காக டெக்னாலஜி உள்ளிட்ட பல விஷயங்களை விட்டுவிட்டு இயற்கையான வாழ்க்கையை ஏற்றுக்கொண்டுள்ளார்.
மார்க் பாயில் கல்லூரியில் வணிகம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். படிப்பை முடித்த அவருக்கு பிரிஸ்டல் நகரில் உள்ள உணவு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்து வந்தார். 2007-ம் ஆண்டு, திடீரென ஒரே இரவில் நடந்த ஒரு சம்பவம் அந்த நபரின் வாழ்க்கையே மாற்றியது. மார்க் ஒரு நாள் படகில் அமர்ந்து மக்களிடம் தத்துவம் பேசிக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில், எல்லா பிரச்சனைகளுக்கும் பணம் மட்டுமே மூலகாரணம் என்பதை அவர் உணர்ந்தார். அப்போது தான் இனி தான் சம்பாதிப்பதும் இல்லை, செலவு செய்வதும் இல்லை என முடிவு செய்தார்.
இப்போது சம்பாதிப்பதும் இல்லை, செலவு செய்வதும் இல்லை
இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் மார்க் தனது விலையுயர்ந்த படகை விற்று பழைய கேரவனில் வாழத் தொடங்கியுள்ளார். பணமில்லாமல் வாழ ஆரம்பித்துள்ளார். பணம் இல்லாமல் வாழத் தொடங்கிய பிறகு, சில மாதங்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளார். பிரச்னைகளை தவிர்ப்பதற்காக அவர் டீ, காபி உள்ளிட்ட பல்வேறு பழங்ககவழக்கங்களை கைவிட்டுள்ளார். ஆதிமனிதன் இயற்கையிலிருந்து பெற்றதை மட்டுமே பயன்படுத்தினான், அதனால் அவன் நோயில்லாமல் வாழ்ந்தான். அப்படி வாழ்ந்தால் நாம் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை என்கிறார் மார்க் பாயில்.
இப்படி பணமே இல்லாமல் வாழத்தொடங்கிய பிறகு பல நண்பர்களையும் அவர் பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு தொழில்நுட்பத்தை முற்றிலுமாக கைவிட்ட அவர், தனது பழைய வாழ்க்கைக்குப் பதிலாக எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதாகக் கூறுகிறார்.
Source:news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
கட்டுரை