இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
1960களில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற ஆசிரியர் ஏ. ஏ. எம். புவாஜி அவர்கள், 1963ம் ஆண்டில் கல்ஹின்னை அல்மனார் மகா வித்தியாலத்தில் தனது ஆசிரியப் பணியைத் தொடர்ந்தபோது, நான் முதலாம் வகுப்பில் கற்றுக் கொண்டிருந்தேன். நான் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் தோற்றும் வரை ஆசிரியர் ஏ. ஏ. எம். புவாஜி அவர்கள் அல்மனாரிலேயே தனது பணியைத் தொடர்ந்து வந்தார்.
மாணவர்களுக்கு மிகத் திறமையாகக் கல்வியைக் கற்றுக் கொடுப்பதில் ஈடுபட்டுவந்த ஆசிரியர் புவாஜி அவர்கள், தனது ஓய்வு நேரங்களில், ஆங்கில மற்றும் தமிழ் நூல்களை வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தவராவார். கலை இலக்கியத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டவரான அன்னார், கல்ஹின்னை அல்மனாரில், மாதம் ஒரு முறை நடைபெற்று வந்த மாணவர் மன்றத்தைத் தொடங்கி வைத்து, மாணவ-மாணவியரின் மேடைக் கூச்சத்தை இல்லாமலாக்கச் செய்த ஆசிரியர் என்றால் அது மிகையாகாது!
மாணவர்களை மாகாண ரீதியாகவும், அகில இலங்கை ரீதியாகவும் பேச்சுப் போட்டிகளிலும், கட்டுரைப் போட்டிகளிலும் கலந்து கொள்ளவைத்து, வெற்றிபெறச் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தவராவார்.
அதன் பின்னர், மாத்தளை ஸாஹிராக் கல்லூரியில் சில காலம் அதிபராகக் கடமையாற்றிய பின் ஓய்வு பெற்றார். தனது இறுதிக்காலம் வரை தாவாப் பணியில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
1993ம் ஆண்டில் எழுத்துத்துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர், முஸ்லிம் சமய- பண்பாட்டாலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் வெளியிடப்பட்ட 300 பக்கங்கள் கொண்ட "மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள்" என்ற வரலாற்று நூலை எழுதினார்.
அதன் பின்னர், 1994ம் ஆண்டில் தனது ஆருயிர் நண்பரான "கவிமணி எம்.சீ.எம்.ஸுபைர்" பற்றிய
நூலொன்றை எழுதி, வர்த்தகச் செல்வர் - அல்ஹாஜ். எம்.எச்.எம். பஷீர் அவர்களது அணுசரனையுடன் வெளியிட்டு வைத்தார்.
சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த அன்னாரை, வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!
செம்மைத்துளியான்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
அஞ்சலி