மிரளவைக்கும் மிக்ஜாம் புயல்.. வேளச்சேரி பாலத்தை கார் பார்க்கிங்காக மாற்றிய மக்கள்!

மிரளவைக்கும் மிக்ஜாம் புயல்.. வேளச்சேரி பாலத்தை கார் பார்க்கிங்காக மாற்றிய மக்கள்!


தொடர் மழையால், சென்னையில் திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நுங்கம்பாக்கம், தியாகராய நகர், மேற்கு மாம்பலம், கொரட்டூர், ஜி.பி.சாலை,  மடிப்பாக்கம், கிருஷ்ணவேணி, அம்பாள் நகர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன.

இந்த நிலையில், வேளச்சேரி விஜயநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் கார்கள் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கனமழையால், விஜயநகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில்  குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை அதன் உரிமையாளர்கள் வேளச்சேரி ரயில் நிலைய மேம்பாலத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

ஏற்கனவே, சென்னை பள்ளிகரணையில் அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கையாக வேளச்சேரி பாலத்தில் பலரும் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

news18



 



Post a Comment

Previous Post Next Post