Ticker

6/recent/ticker-posts

மயங்கிய பாம்பு; வாயோடு வாய் வைத்து CPR சிகிச்சை அளித்த காவலர் - வைரலாகும் Video!


மயங்கிய பாம்புக்கு வாயோடு வாய் வைத்து சிபிஆர் சிகிச்சை அளித்து உயிர்பிழைக்க வைத்துள்ளார் காவலர் ஒருவர்.
 

மயங்கிய பாம்பு

மத்திய பிரதேச மாநிலம், நர்மதாபுரம் பகுதியில் விஷமற்ற பாம்பு ஒன்று குடியிருப்பு காலணியிலுள்ள பைப்லைனுக்குள் நுழைந்துள்ளது. அந்த பாம்பை வெளியே எடுக்கும் முயற்சியில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த தண்ணீரை குழாயில் ஊற்றியுள்ளனர்.

இதனையடுத்து பாம்பு வெளியே வந்துள்ளது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அந்த பாம்பு மயங்கியுள்ளது. இதனால் அந்த காலணியிலுள்ளவர்கள் காவலர்களை அழைத்தனர். உடனடியாக அங்கு வந்த காவல்துறையை சேர்ந்த அதுல் சர்மா என்பவர் பாம்பை எடுத்து பரிசோதித்துள்ளார்.

CPR அளித்த காவலர்

பின்னர் அந்த பாம்பின் வாயில், தனது வாயை வைத்து ஊதி CPR எனும் சிகிச்சை அளித்துள்ளார். இதனையடுத்து பாம்பின் உடலில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக கழுவிவிட்டு அதை தடவிக் கொடுத்தார் அந்த காவலர்.

சிறிது நேரத்திலேயே பாம்பு சுயநினைவடைந்து ஊர்ந்து சென்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, அந்த காவலரை பலரும் பாராட்டி வருகின்றனர். 

ஆனால் இதனை அனைவரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், பாம்பை கையாளத்தெரிந்த நபர்கள் மட்டுமே இது போன்ற உடனடி உயிர் காக்கும் சிகிச்சையை பாம்புகளுக்கு முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Source:ibctamilnadu


 



Post a Comment

0 Comments