உலகெங்கிலும் கூகுளில் மிக அதிகப்படியாக கேட்கப்பட்டுள்ள கேள்விகள் என்னென்ன தெரியுமா?

உலகெங்கிலும் கூகுளில் மிக அதிகப்படியாக கேட்கப்பட்டுள்ள கேள்விகள் என்னென்ன தெரியுமா?

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம் உள்ளங்கைகளில் அடங்கும் செல்ஃபோனில் இணைய வசதியுடன், கூகுள் தளத்திற்கு சென்று நாமே நம்முடைய அனுபவத்தில் எத்தனை, எத்தனை கேள்விகளை கேட்டிருப்போம் என்று. ஆம், எந்தவொரு விஷயம் என்றாலும் அருகாமையில் உள்ள நிபுணர்களை தேடி பிடிப்பதைக் காட்டிலும், கூகுளில் கேள்வியாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்ற பக்குவம் ஏற்பட்டிருக்கிறது.

அண்மையில், வழக்கு ஒன்றில் மருத்துவ காரணத்தை குறிப்பிட்டு ஜாமீன் கோரப்பட்ட மனுவை விசாரித்தபோது, உச்சநீதிமன்ற நீதிபதிகளே அந்த உடல்நல பிரச்சினை குறித்து கூகுளில் படித்து பார்த்ததில், அது ஒன்றும் பெரிய பாதிப்புக்குரிய விஷயமல்ல என்று தெரிய வந்ததாகக் கூறி ஜாமீன் மறுத்தனர்.

அறிவியல், மருத்துவம், பொது அறிவு, வாழ்வியல், சினிமா, விளையாட்டு என எந்தவொரு விஷயமானாலும் சட்டென்று கூகுளில் கேட்டு விடுகிறோம். இவ்வாறு ஒவ்வொரு நபரும் கேட்கின்ற கேள்விகளை கூகுள் சேமித்து வைக்கிறது. அதில் மிக அதிகப்படியாக கேட்கப்பட்ட கேள்விகள் என்ன என்ற பட்டியலும் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு மாதமும் குறைந்தப்பட்சம் 30 லட்சம் யூசர்களாவது “என்னுடைய ஐபி முகவரி என்ன’’ என்ற கேள்வியை முன்வைக்கின்றனர். இதுபோல கூகுளில் முன்வைக்கப்பட்ட முதன்மையான 20 கேள்விகளும், அதனை எத்தனை லட்சம் பேர் கேட்டனர் என்ற விவரத்தையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

கேள்விப் பட்டியல்:

என்னுடைய ஐபி முகவரி என்ன? - 33.5 லட்சம்
இப்போது என்ன நேரம்? - 18.3 லட்சம்
வாக்கு செலுத்துவது எப்படி? - 12.2 லட்சம்
டை எப்படி கட்டுவது? - 6.73 லட்சம்
உங்களால் இதை இயக்க முடியுமா? - 5.5 லட்சம்
இது என்ன பாடல்? - 5.5 லட்சம்
உடல் எடையை குறைப்பது எப்படி? - 5.5 லட்சம்
ஒரு கப்பில் எத்தனை அவுன்ஸ் உள்ளன? - 4.5 லட்சம்
அன்னையர் தினம் எப்போது? - 4.5 லட்சம்
ஒரு பவுண்டில் எத்தனை அவுன்ஸ் உள்ளன? - 4.5 லட்சம்
ஒரு கலூனில் எத்தனை அவுன்ஸ் உள்ளன? - 4.5 லட்சம்
ஒரு ஆண்டில் எத்தனை வாரங்கள் உள்ளன? - 4.5 லட்சம்
தந்தையர் தினம் எப்போது? - 4.5 லட்சம்
நான் இதை இயக்க முடியுமா? - 3.68 லட்சம்
கர்ப்பம் அடைவது எப்படி? - 3.68 லட்சம்
யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? - 3.68 லட்சம்
மேக் சாதனத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எப்படி? - 3.01 லட்சம்
டொனால்டு டிரம்புக்கு என்ன வயது ஆகிறது? - 3.01 லட்சம்
துரிதமாக எடையை குறைப்பது எப்படி? - 3.01 லட்சம்
தொப்பையை குறைப்பது எப்படி? - 3 லட்சம்

இது மட்டுமல்லாமல் முட்டையை வேக வைப்பது எப்படி, என்னுடைய ஃபோன் எங்கே இருக்கிறது என்பது போன்ற கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டுள்ளன. கடந்த 6 மாத காலத்தில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளில், இந்தியர்கள் தீபாவளியை கொண்டாடுவது ஏன்?, தீபாவளி அன்று கோலமிடுவது ஏன்? தீபாவளி அன்று தீபவிளக்கு ஏற்றுவது ஏன்? தீபாவளி அன்று எண்ணெய் குளியல் செய்வது ஏன்? என்பவை இடம்பெற்றுள்ளன.

news18


 



Post a Comment

Previous Post Next Post