சித்ரதுர்கா மாவட்டம், ஹோசதுர்கா தாலுக்கா, சிக்கப்யலாடகெரே கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் சி.எல் மற்றும் சல்லகெரே தாலுக்கா திப்பரட்டிஹள்ளியை சேர்ந்த யமுனா ஜி.எம், ஆகிய இருவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது டிசம்பர் மாதம் 7ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு, சிக்கப்யலாடகெரேயில், உள்ள பைரவேஷ்வர் கல்யாண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக, 6-ம் தேதி மாலை மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில் திருமணத்தன்று காலை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், மணமகன் மணமகள் கழுத்தில் தாலியை கட்டுவதற்கு முற்படும்பொழுது, திடீரென மணமகள் தனது வலது கையால் தாலியை தட்டி விட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மணமகளிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை வழங்கி சமாதானம் செய்ய முயன்றும், தான் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்பதால் திருமணம் செய்து கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
அத்துடன் மணமகனை திருமணம் செய்து கொள்ளவும் மறுத்துவிட்டார். தாலி கட்ட முற்படும்பொழுது திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மணமகளின் இந்த முடிவு உறவினர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்ட முற்படும்பொழுது தாலியை மணமகள் தட்டி விட்டு திருமணம் செய்து கொள்ள மறுக்கும் வீடியோவும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
zeenews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments