இந்த Rava puddingஐ குறைந்து 45 நிமிடத்திலேயே சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.
இந்த puddingஐ வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதை எப்படி சுலபமாக வீட்டிலேயே செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சர்க்கரை-1/2 கப்
பால்- 2 கப்
வெண்ணெய்- 2 ஸ்பூன்
ரவை- 1/4 கப்
முட்டை- 2
வென்னிலா எசன்ஸ்-2ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.
பின் வேறொரு பாத்திரத்தில் பால் மற்றும் சர்க்கரை 1/2 கப் மற்றும் வெண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும்.
தொடர்ந்து இதில் ரவை சேர்த்து ரவை வெந்து வரும் வரை கொதிக்கவிடவும்.
ஒரு சின்ன பௌலில் முட்டை சேர்த்து அதனுடன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின் கலக்கிய முட்டையில் செய்துவைத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும்.
இறுதியாக ஒரு பாத்திரத்துல செய்துவைத்த சர்க்கரை பாகு சேர்த்து பின் அதில் செய்துவைத்த ரவை கலவையை சேர்க்கவும்.
ரவை கலவையை மூடி போட்டு , இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஸ்டாண்ட் வைத்து குறைவான சூட்டில் 35 நிமிடம் வேகவைத்து இறக்கினால் சுவையான ரவா புட்டிக் கேக் தயார்.
Source:manithan
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
சமையல்