இஸ்ரேல் சிறையில் இருந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட இளம்பெண்: அவரின் பின்னணி

இஸ்ரேல் சிறையில் இருந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட இளம்பெண்: அவரின் பின்னணி


இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், இஸ்ரேல் சிறையில் வாடும் பாலஸ்தீன மக்களில் 39 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கட்டார் முன்னெடுத்த பேச்சுவார்த்தை

அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் முன்னெடுத்த அதிரடி தாக்குதலுக்கு பின்னர் போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், அதன் பின்னர் காஸா பகுதி மீது கண்மூடித்தனமான தாக்குதலை முன்னெடுத்து வந்தது.
இதில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 14,800 கடந்துள்ளது. இந்த நிலையில் கட்டார் முன்னெடுத்த பேச்சுவார்த்தையின் பலனாக 4 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவானது.

மட்டுமின்றி, இரு தரப்பும் கைதிகளை விடுவிக்கவும் ஒப்புக்கொண்டனர். அந்த வகையில் இஸ்ரேல் தரப்பு பாலஸ்தீன கைதிகள் 39 பேர்களை விடுவித்துள்ளனர். ஹமாஸ் தரப்பில் வாக்குறுதி அளித்தது போன்று 25 பணயக்கைதிகளை விடுவித்துள்ளனர்.

இதில் 12 தாய்லாந்து நாட்டவர்களும் 13 இஸ்ரேல் நாட்டவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் தரப்பில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை சேர்ந்த 28 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

24 பெண்களில் Malak Salman ஒருவர்

11 பேர் கிழக்கு ஜெருசலேம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பெரும் திரளான மக்கள் பாலஸ்தீன கைதிகளை வரவேற்றுள்ளனர். இதில் 24 பெண்களும் 15 இளைஞர்களும் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 24 பெண்களில் Malak Salman என்பவரும் ஒருவர். பாடசாலை செல்லும் வழியில் இஸ்ரேல் ராணுவத்தினரால் Malak Salman கைது செய்யப்பட்டார். 16 வயதேயான Malak Salman ஜெருசலேமில் ஒரு பொலிஸ்காரரைக் குத்த முயன்றதாக கூறி கைதானார்.

தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு Malak Salman விடுதலையாகியுள்ளார். இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள Beit Safafa பகுதியிலேயே Malak Salman குடும்பம் வசித்து வருகிறது.

Malak Salman விடுவிக்கப்பட்ட தகவல் அறிந்து மக்கள் அவரது குடியிருப்புக்கு திரண்டுள்ளனர். ஆனால் இஸ்ரேல் பொலிசார் பார்வையாளர்களை தடுத்து நிறுத்தி வெளியேற்றுவதாக அவரது தாயார் ஃபாத்தினா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, விடுவிக்கப்பட்ட பாலஸ்தீன கைதிகள் தொடர்பில் ஜெருசலேமில் கொண்டாட்டம் ஏதும் முன்னெடுக்க வேண்டாம் என இஸ்ரேல் பொலிசார் தடை விதித்துள்ளனர். மேலும் கூட்டத்தை கலைக்க, கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

lankasri



 



Post a Comment

Previous Post Next Post