இது மிகவும் சிக்கலான கேள்வியாக இருக்கலாம்.
இஸ்ரேல் எதிர்பார்ப்பதும் அதைத்தான். அதனை அரபு நாடுகள் செய்வது தடியைக் கொடுத்து அடிவாங்குவது போல் ஆகலாம். இஸ்ரேலை அரசியல் பொருளாதார மற்றும் உபாய ரீதியாகத் தாக்கும் ஒரு வலையமைப்பே இன்றைய தேவையாகும்.
காஸா யுத்தம் திடீரென ஹமாஸ் தாக்குதலுடன் ஏற்பட்டது என்று நினைத்தால் அது பிழையாகும். ஹமாஸின் தாக்குதல் திட்டம் பற்றி மொஸாத் அறிந்திருக்க வில்லை என்பது கூட நம்ப முடியாது. அவ்வாறு நடந்ததும் என்ன செய்யலாம் என அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டம் போட்டு இருப்பார்கள் என்றுதான் ஊகிக்க முடியும் . எப்படியோ ஹமாஸ் தாக்குதல் எதிர்பாராத அளவு கடுமையாக அமைந்ததுதான் இஸ்ரேலை அவமானப்பட வைத்துள்ளது எனலாம்.
ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலுக்கு முன்பாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இரண்டு பிரச்சினைகளுக்கு என்ன செய்யலாம் என்று தலையை பிய்த்துக் கொண்டிருந்தார்கள்.
1.ஈரானின் அனுசக்தி ஆற்றலுக்கான முயற்சியும் , ஏனைய நவீன ஆயுதத் தயாரிப்புகளும் அவர்களை அச்சமூட்டியது . இது இப்படியே போனால் எதிர்கால இஸ்ரேலிய விரிவாக்கம் தடைப்படும். அதைத் தடுக்க எவ்வாறு ஈரானை அழிப்பது?
2.ரஷ்ய, சீன, ஈரான், சவூதி, இந்தியா போன்ற நாடுகளுடன் இன்னும் ஆபிரிக்க நாடுகள் இணைந்த BRICS கட்டமைப்பால் டொலர் வீழ்த்தப்பட்டால், அமெரிக்காவும் இஸ்ரேலும் அவ்வளவுதான். அதைத் தடுக்க மத்திய கிழக்கின் அரபுநாடுகளின் பொருளாதாரத்தை உடனடியாக தகர்க்க என்ன செய்ய வேண்டும். அதற்கு என்ன வழி?
இப்போது உங்களுக்குப் புரியும், அரபு நாடுகள் அவசரப்பட்டால், 1967 இல் 6 நாள் யுத்தத்தில் கோட்டை விட்டதை விடவும் நிலமை மோசமாகலாம்.
இன்று எல்லா அரபு நாடுகளும் இணைந்து இஸ்ரேலை தரைமட்டம் ஆக்கினாலும், இஸ்ரேலிய நீரமூழ்கிகள் மூலம் அரபு நாடுகளை அழிக்கலாம். அரபு நாடுகளிடம் உள்ள ஆயுதங்களின் மூலம் தாக்குதல் நடத்தினாலும்,தாக்கவரும் ஏவுகனைகளுக்கான தாக்குதல் தடுப்பு ஆற்றல் கிடையாது. பல ஆயுதங்களின் புரோகிராம் சிப்ஸ் அமெரிக்காவினுடையது. அவற்றை நிறுத்த செயல்படாது விட அமெரிக்காவுக்கு முடியும்.
எனவே இஸ்ரேலால் துல்லியமாக எதிரி இலக்குகளை அழிக்க முடியும்.
சில நிமிடங்களில் அரபு நாடுகளின் பொருளாதார முதுகு எழும்பை நொறுக்கி விட்டால் பல வருடங்களுக்கு அவர்களால் எழும்பவும் முடியாது, இஸ்ரேலை எதிர்க்கும் சக்தியும் இருக்காது. ஹமாஸ் என்ற ஒரு ஆயுதக் குழுவோடு மோத, அமெரிக்காவின் ஆறு யுத்தக் கப்பல்கள் உதவிக்கு வந்ததன் விளக்கம் இதுதான்.
காஸாவை விட ஈரானை அழிப்பதும், BRICS ஐ செயல்படாமல் விடுவதுமே அமெரிக்க இஸ்ரேல் பிரதான இலக்குகள் . காஸாவைக் கைப்பற்றி முழுப் பலஸ்தீனத்தையும் விழுங்குவது, காஸா பகுதி பூமியின் கீழ் எண்ணை எரிவாயு அகழ்வுத் திட்டம், காஸா ஊடாக பாரிய கால்வாய் வெட்டி கடலை உள்ளீர்த்து வருமானமாக மாற்றும் திட்டம் , சுலைமான் கோவிலை கட்டி முடித்து அகன்ற இஸ்ரேலை வியாபிக்கும் திட்டம் என்பவைகளும் அவர்கள் திட்டங்களில் உள்ளவைகளே.
காஸாவை இலகுவாக கைப்பற்ற முடியாது.யானையிடம் எவ்வளவு பலம் இருந்தாலும் தூத்திரிப் புல்லை அதனால் பிடுங்க முடியாது. அதுபோல அதற்கு இஸ்ரேல் பாரிய விலை கொடுக்க நேரும். அல்லாஹ் அந்த பூமியை எப்படியோ காப்பாற்றுவான். அப்படியே அது பரிபோனாலும், அது இஸ்ரேளின் வெற்றி அல்ல. அதை சாட்டாக வைத்து, ஏனைய காய் நகரத்தல்களை செய்வதுதான் அவர்களது நச்சுத் திட்டமாகும்.
அரபு நாடுகள் நேரடியாக யுத்தத்தில் இரங்காது போனாலும், ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ், ஹுதிகள், குர்திகள், மற்றும் குழுக்கள் கைகளில் ஆயுதப் பற்றாக் குறை ஏற்படாது. என்னதான் ஆயுதங்கள் இருந்தாலும் அவற்றை ஆயுதக் குழுக்களுக்கு எதிராக பயப்படுத்தும் வாய்ப்புகள் கஷ்டமாக இருக்கும். நாடுகளுக்கு இடையேயான யுத்தங்களில் எந்த நாசகார ஆயுதங்களையும் பாவிக்க வாய்ப்பு இருக்கிறது.
எனவே ஆயுதக் குழுக்கள்தான் இஸ்ரேலைத் தாக்க இருக்கும் சிறந்த வழியாகும். ஆயிரம் வருடங்கள் வாழ ஆசைப்படும் யூதர்களுக்கும், எந்த நிமிடமும் சுவனத்துக்கு ஆசைப்படும் ஜிகாதிய போராளிகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடு இருக்கவே செய்யும். அநேகமாக நெதான்யாகு பதவியில் இருந்து தூக்கப்படுவார்.அல்லது அமெரிக்காவோ அல்லது இஸ்ரேளியரோ அவருக்கு முடிவு காட்டுவார்கள்.
நபி ஸல் அவர்களைக் கைது செய்ய ஆளனுப்பிய பாரசீக மன்னனுக்கு நடந்ததுபோல நடந்தாலும் புதுமை இல்லை. சீக்கிரம் யுத்தம் நின்று அமைதி நிலவ அல்லாஹ் வழி அமைப்பானாக.
Dr. Ajmal hassan.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
கட்டுரை