
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொங்கப்பட்டியைச் சேர்ந்தவர் குருவையா. பூ வியாபாரம் செய்து வரும் இவரது மகன் 27 வயதான ரோஷன். இவருக்கு முகநூல் மூலமாக பொள்ளாச்சியைச் சேர்ந்த உஷா என்பவரின் நட்பு ஏற்பட்டுள்ளது. முகநூல் டிபியில் அழகான அவரது முகத்தைக் கண்டு மயங்கிய ரோஷன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஒருநாள் அவரது உண்மையான உருவத்தை பார்க்க நேர்ந்த ரோஷன் மிரண்டு போயுள்ளார்.
அதன் பிறகு முகநூல் மூலம் உஷாவிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டதுடன், தனது முகநூல் பக்கத்தையே முடக்கி வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உஷா தனக்கு ஆதரவாக கூத்தப்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, திமுக பிரமுகர் சௌந்தரராஜன், மற்றும் சிவஞானம் உள்ளிட்ட மூவரை அழைத்துக் கொண்டு நிலக்கோட்டை பகுதிக்கு வந்துள்ளார். முகநூல் தொடர்பை துண்டித்துக் கொண்ட ரோஷன் தன்னுடன் இருப்பது போன்று போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒட்டியுள்ளனர்.
“கொங்கப்பட்டியைச் சேர்ந்த பூக்கடை குருவையாவின் மகன் ரோஷன் பொள்ளாச்சியைச் சேர்ந்த உஷா என்ற பெண்ணை காதலித்து ஏமாற்றி விட்டான்” என அந்த போஸ்டரில் எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ரோஷன் உஷாவை நேரில் சந்திக்க துணிவின்றி தந்தை குருவையாவை பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்துள்ளார். குருவையா சம்பந்தப்பட்ட உஷா உள்ளிட்டோரிடம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தையில் உஷா, கிருஷ்ணவேணி, சௌந்தரராஜன், சிவஞானம் ஆகிய நான்கு பேரும் ரூ. 5 லட்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என குருவையா தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் பணத்துடன் வரவில்லை என்றால் மானத்தை வாங்கி விடுவோம் என மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நிலக்கோட்டை காவல் நிலையத்தில் குருவையா புகார் அளித்தார் விசாரணைக்குப் பின் வழக்குப்பதிவு செய்த போலீசார் உஷா உள்ளிட்ட மூவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். போஸ்டர் அடித்து ஒட்டி பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments