ஆஸ்திரேலிய கடற்கரையில் படையெடுக்கும் ஆயிரக்கணக்கான எலிகள்.. அச்சத்தில் மக்கள்..

ஆஸ்திரேலிய கடற்கரையில் படையெடுக்கும் ஆயிரக்கணக்கான எலிகள்.. அச்சத்தில் மக்கள்..


ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந் மாகாணத்தில் வசிப்பவர்களுக்கு எலிகள் மிகப்பெரிய தொந்தரவாக மாறி உள்ளது. கடந்த சில மாதங்களாக அங்கிருக்கும் கடற்கரை பகுதிகள் உயிருடன் இருக்கும் எலிகள் மற்றும் இறந்த எலிகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிக இனப்பெருக்கம் மற்றும் ஈரமான வானிலை ஆகிய காரணங்களால் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

எலிகள் தங்களுக்கான உணவைத் தேடி கடற்கரையை நோக்கி வருவதாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவை அனைத்தும் கடலில் அடித்து செல்லப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியை சேர்ந்த் மீனவர்கள் இதுகுறித்து பேசிய போது ” கடந்த சில நாட்களாக எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆற்றுப் படுகையில் துர்நாற்றம் வீசுகிறது. நதியில் பல எலிகள் உயிருடன் காணப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

மற்றொரு உள்ளூர்வாசி பேசிய போது “ 'நாங்கள் இறந்த எலிகள் மட்டுமின்றி அல்லது உயிருடன் இருந்த பல எலிகளை பார்த்தோம்.நான்கு நாட்களுக்குப் பிறகு நாங்கள் திரும்பியபோது எலிகள் மணலில் ஓடுவதை பார்க்க முடிந்தது.” என்று தெரிவித்தார்.
பசியுடன் இருக்கும் அந்த எலிகள் நரமாமிசமாக மாறி, ஒன்றையொன்று உண்ணத் தொடங்கியதாக மற்ற உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

கரும்பா என்ற மற்றொரு நகரம் மீன்பிடித்தல் மற்றும் பறவைகள் கண்காணிப்புக்கு நன்கு அறியப்பட்ட இடமாக இருப்பதால், எலிகளின் தொல்லை நாட்டின் சுற்றுலாவை பாதிக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குயின்ஸ்லாந்து இன்னும் ஈரமான வானிலையை எதிர்கொள்ள தயாராகி வருவதால் எலிகளின் தொல்லை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பகுதிகள் அதிக இனப்பெருக்கம் காரணமாக எலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன. 

asianetnews


 



Post a Comment

Previous Post Next Post