திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-118

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-118


குறள் 58.
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

நல்ல பழக்க வழக்கம் இருக்க ஒருத்தன் வீட்டுக்காரனா கெடைச்சா, அந்த பொண்ணுக்கு நல்லபடியான மேல் ஒலக வாழ்க்கையும் கிடைக்கும். 

குறள் 61
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.

எனக்குத் தெரிஞ்சவரை நமக்கு கெடைச்சிருக்க அறிவாளி புள்ளைங்க தான்,  நம்மளோட இல்வாழ்க்கையில நமக்கு கெடைச்சிருக்க ஒசந்த செல்வம்.  

குறள் 62.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

நாம பெத்த புள்ளைங்க எந்த பழிச்சொல்லுக்கும் ஆளாகாம இருந்தா போதும். அடுத்து வார எந்த பிறவியிலயும் எந்த கெடுதலும் நம்மகிட்ட வராது. 

குறள் 63.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்.

நம்ம புள்ளைங்க தான் நம்மோட சொத்து. அந்த புள்ளைங்க வந்து சொத்தா ஆகிறது அவொஅவொ செய்யுத நல்ல செயல்களாலத் தான். 

குறள் 71.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.

நம்ம மனசுல இருக்க அன்பை பூட்டு போட்டுல்லாம் பூட்டி வைக்க முடியாது. நமக்கு நெருக்கமானவங்க தும்பப்படுததை பாக்கும்போது, நம்ம கண்ல வார கண்ணீர் இருக்கே அது நம்ம உள் அன்பை வெளிக்காட்டிரும். 

(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post