Ticker

6/recent/ticker-posts

துளித் துளி நிலா!


மரத்தை முழுதாய் நனைத்த பின் 
நன்றிக் கடன் செலுத்தியதாய் நினைக்கிறது மழை

மெழுகுவர்த்தி உருகுவதை 
தள்ளி நின்று இரசிக்கிறது இருள்

காற்றைப் பிடித்து 
வெட்டி வெட்டி வீசுகிறது மின் விசிறி

குருவிக் கூட்டினுள் இல்லற இரகசியம் 
காட்டிக் கொடுத்தது முட்டை

யானை மீது பாகன் 
உயரத்தில் பயணிக்கிறது தன்னம்பிக்கை

உடைந்து போனது நீர்க் குமிழி 
ஏமாற்றம் அடைந்தது காற்று

ஒளி வரும் வரை 
வீரம் காட்டிக் கொண்டிருந்தது இருள்

விடிந்த போது 
இறந்து கிடந்தது இரவின் கனவு

நீர்த் துளிகளை ஒன்றின் மேலொன்றாய்
அடுக்கி வைத்திருந்தது கண்ணாடிக் குவளை

ராஜகவி
இலங்கை



 



Post a Comment

0 Comments