Ticker

6/recent/ticker-posts

இளமை தொலைந்த பொழுதுகள்!


ஆடித் தீர்த்த இளமை
ஆசையோடு நிற்கிறது.
சூடி மகிழ்ந்த மாலை
சூன்யமாகி கிடக்கிறது.

கூடி கலந்த உறவு
கூண்டுக்குள் சிரிக்கிறது.
பாடிக் கிடந்த நாவோ
பல்லிழந்து தவிக்கிறது.

ஓடித் திரிந்த கால்கள்
உட்கார துடிக்கிறது.
மாடி,மனைதோப்பு கூட
மகிழ்ச்சி தர மறுக்கிறது.

மூடிவைத்த இளமை
முகஞ்சுளிக்க வைக்கிறது.
சாடிக் குதித்த கால்கள்
சலனமின்றி விரைக்கிறது.

தாடி, மீசை நரையோடு
தளிர்த்தே வளர்கிறது.
நாடி தளர்ந்து நமனை
நாளை வரசொல்கிறது.

வாடிப்போகுமுன்னே
வாலிபத்தை காத்திடுங்கள்
கோடிகொடுத்தும் வாராது.... 
கொஞ்சும் இளமை காலம்.

"சோழா "புகழேந்தி
109/4 வினாயகர்கோவில் வீதி
கரியமாணிக்கம் அஞ்சல் - 605 106
அலைபேசி: 7094914328
விழுப்புரம் மாவட்டம்
தமிழ்நாடு


 



Post a Comment

0 Comments