Ticker

6/recent/ticker-posts

ஒரு கிலோ 125,000 ரிங்கிட் … உலகிலேயே அதிக விலையுள்ள 6 உணவுகளின் பட்டியல் இதோ


உணவு என்பது அனைத்து உயிரின் அடிப்படை தேவை. முதற்கட்டத்தில் உணவு என்பது பசிக்காகவும், ஆற்றலுக்காகவும் மட்டும் இருந்தது. நாகரீக வளர்ச்சியில் ருசிக்காக பல்வேறு விதமான உணவுகள் உருவாக்கப்பட்டது. அப்படியே உடலில் சத்துகளை அதிகரிக்கவும் உணவு முறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.

ஒவ்வொரு பகுதிகளுக்கு ஏற்றவாறு விதவிதமான உணவுகள் இருக்கின்றன. தற்போது தொழில்நுட்ட வளர்ச்சியில் நன்மையாக உலகில் உள்ள அனைத்து வகையான உணவுகளை எந்த நாட்டில் இருந்தும் சுவைக்க முடிகிறது. அந்த வகையில், உலகிலேயே அதிக விலையுள்ள 6 உணவுகளைப் பற்றி தெரிந்துகொள்ளுவோம்.

வெள்ளை ட்ரஃபிள்ஸ் (White truffles) :  
இத்தாலி நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கிடைக்கும் இந்த அரிதான உணவு வகை மிகவும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றன. அரை கிலோ வெள்ளை ட்ரஃபில்ஸ் 11,500 ரிங்கிட்  மதிப்பில் விற்கப்படுகின்றன. உலகிலேயே அதிக விலையுள்ள பூஞ்சைகளில் இதுவும் ஒன்று.

கோபி லூவாக் காஃபி (Kopi luwak coffee ) :
சிவெட் காஃபி என அழைக்கப்படும் கோபி லூவாக் காஃபி, மிகவும் தனித்துவமான முறையில் தயாரிக்கப்படுகிறது. இதன் காரணமாக உலகிலேயே மிகவும் அதிகமான விலையுள்ள காஃபியாக அறியப்படுகிறது. ஒரு கப் லூவாக் காஃபியின் விலை 400 ரிங்கிட்.

குங்குமப்பூ : 
சிவப்பு தங்கம் என அழைக்கப்படும் குங்குமப்பூ, உலகிலேயே மிகவும் விலையுள்ள மசாலா பொருளாக அறியப்படுகிறது. இதை அறுவடை செய்ய அதிக வேலையாட்கள் தேவைப்படுவதால் இதன் விலையும் அதிகமாக இருக்கிறது. ஒரு கிராம் குங்குமப்பூவின் விலை 45 ரிங்கிட் முதல் 220 ரிங்கிட் வரை உள்ளது.

யூபாரி கிங் பழம் : 
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அற்புதமான சுவை கொண்ட யூபாரி கிங் பழம், உலகிலேயே மிகவும் விலை அதிகமுள்ள பழமாக அறியப்படுகிறது.

மாட்ஸுடேக் காளான் (Matsutake mushrooms) :
ஜப்பான் உணவில் முக்கிய அங்கமாக இருக்கும் மாட்ஸுடேக் காளான், உலகிலேயே மிகவும் சுவைமிகுந்த பூஞ்சையாக அறியப்படுகிறது. இதன் விலையை கேட்டு அதிர்ச்சியடைந்து விடாதீர்கள். அரை கிலோ மாட்ஸுடேக் காளானின் விலை 45,000 ரிங்கிட்  ஆகும்.

அல்மாஸ் கேவியார் : 
ஈரான் நாட்டின் பெலுகா பகுதியில் உள்ள மீன்களின் முட்டையிலிருந்து இந்த உணவு செய்யப்படுகிறது. உலகிலேயே மிகவும் விலை அதிகமுள்ள மீன் உணவாக கருதப்படும் அல்மாஸ் கேவியார், ஒரு கிலோ 125,000 ரிங்கிட்டிற்கு கிடைக்கிறது.

makkalosai


 



Post a Comment

0 Comments