(நபி வழியில் தொழுகை)
03) ஸப்பில் நிற்கும் ஒழுங்குகளை பேணல்:
ஜமாஅத்தாக தொழும்போது ஸப்புகளில் பின்வரும் ஒழுங்குகளை கவனத்தில் கொள்ள வேண்டும்:
1. நேராக நிற்றல் :
நபிகளார் ஸப்புகளில் நேராக நிற்கும் விடயத்தில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள். ஸஹாபாக்கள் ஸப்புகளில் நேராக நிற்கும் வரை தொழுகையை ஆரம்பிக்க மாட்டார்கள். அது மட்டுமன்றி, ஸஹாபாக்கள் நேராக நிற்கிறார்களா என்று பார்ப்பதற்காக ஸப்புகளுக்கிடையே சென்று ஸஹாபாக்களின் தோள்களை தடவிச் செல்வார்கள் (ஸஹீஹ் முஸ்லிம்).
நபியவர்கள் கூறினார்கள்: உங்களது ஸப்புகளை நேராக வைத்திருங்கள். இல்லையேல் அல்லாஹ் உங்கள் உள்ளங்களுக்கு மத்தியில் வேற்றுமையை ஏற்படுத்திவிடுவான் (புஹாரி, முஸ்லிம்).
மேலும்கூறினார்கள் : உங்கள் ஸப்புகளை நேராக வைத்திருங்கள். ஸப்புகளை நேராக வைத்திருப்பதில் தான் தொழுகையின் பூரணத்துவம் தங்கியிருக்கிறது (முஸ்லிம்).
(தொடரும்)
ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments