திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -23

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -23


குறள் 1157 
துறைவன் துறந்தமை தூற்றாகொல் 
முன்கை  இறைஇறவா நின்ற வளை. 

அப்பாவுக்கு 
கணக்குத் தணிக்கைவேலை! 
ஊர்ஊரா போயிட்டு வருவாரு! 
கூட இருந்தவரைக்கும்  
சிரிப்பும் கும்மாளமுந்தான்! 
அடுத்தஊருக்குப் போயிட்டாரு! 
ஒருவாரம்ஆயிருச்சு! 
ஒருமாசம் கழிச்சுதான் 
வருவாரு! 
தூக்கமேவரல! 
சாப்பிடப்பிடிக்கல! 
அவரநெனச்சு 
மனசுவாடிப்போச்சு! 
உடல்மெலிஞ்சுபோச்சு! 
எனக்கென்னமோ 
அப்பாமேல அவ்வளவு உயிர்! 
வளையல்கூட கழண்டு விழுந்து 
என்னோட ஏக்கத்தை 
காட்டிக்கொடுத்துருமோ?

குறள் 1158 
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் 
அதனி ம்  இன்னாது இனியார்ப் பிரிவு. 

இந்த 
ஆண்டில் இருந்து 
புதுப்பள்ளிக்கூடம்! 
எல்லாம் புதுசாஇருக்கு! 
எப்படிப் பழகுவாங்களோ 
தெரியல! 
யாரப்பாத்தாலும் 
அன்னியராவே தெரியுது! 
இந்தச் சூழ்நிலையே 
துன்பம்தருது! 
என்னோட அண்ணன், தம்பி 
எல்லாம் அங்கேயே படிக்கிறாங்க! 
அவங்கள பிரிஞ்சு 
இங்கபடிக்கிற 
நெனப்பு 
இதைவிடதுன்பமாஇருக்கே! 

குறள் 1159 
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல  
விடிற்சுடல் ஆற்றுமோ தீ. 

அப்பா! 
பள்ளிக்கூடத்துல 
என்பக்கத்திலேயே
என்நட்புத் தோழி 
இருக்காப்பா! 
வகுப்புல இருக்குறவரைக்கும் 
மனசு குளிர்ந்து இருக்குப்பா! 
ஆனா 
அவள பிரிஞ்சு 
வீட்டுக்குவந்துட்டா 
சூடா இருக்குறமாதிரி 
தோணுதுப்பா! 
நட்புத்தீ இப்படித்தான் 
இருக்குமாப்பா? 
ஆமாம்மா 
இது நெருங்குனா குளிரும்! 
விலகுனாசுடும்! 
இப்படியும் இருக்கின்றார்! 

(தொடரும்)


 



Post a Comment

Previous Post Next Post