தனிமரம் தோப்பாகாது எனக்கூறி
விடைப்பெற்ற அப்பனின்
பாத்த்தின் முன்னே
நூறு விதை கொண்ட கனியின்
அங்க பிரதசனம்....
நிழல்களை தேடிடும் வெளையில்
உதிர்ந்த இலைகொண்ட கிளைக்கு
இறகினை படரச்செய்கிறது
முந்தைய நாளில்
முட்டைக்குள் உறங்கிய
பறவையொன்று....
இரு முதுகுகளை தாங்கி
காதல் உரசலில்
ஒவ்வொன்றாக உதிரத்தொடங்கின
மலர்களாய் இலைகள்....
மரங்கொத்தியிட்ட முத்தெல்லாம்
கனுவாக கண்ணசைத்து
நிற்கின்றன மரத்தில்
எதிரெதிர் மரங்களின்
வாக்கு மூலம் இது.....
புல் பார்த்து மரம் ஏங்கிட
மரம் பார்த்து புல் ஏங்கிட
இரண்டையும் இணைய வைக்கிறது
மரத்தினை நிழலால்
புல்லினை மழையால் நனைத்த
இயற்கையொன்று....!
சே கார்கவி கார்த்திக்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
கவிதை