Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-116


குறள் 45. 
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

இல் வாழ்க்கை பயனுள்ளதாவும, பண்பாகவும் அமையணும்னா, மொதல்ல அதுக்கு அன்பான  உள்ளம் வேணும். அறச் செயல்களை செய்யணும்.  

குறள் 46. 
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.

நல்ல அறவழியில குடும்பம் நடத்தணும். அப்படி நடத்துனா, அதுல வார பயன் மாதிரி,  வேற எப்பிடி நடத்தினாலும் வராது. 

குறள் 47. 
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

நல்ல வழியில வாழணும்னு நினைச்சு, அதுக்காக பாடு படுதவங்கள்ல, மொத எடம் யாருக்குன்னா, குடும்ப வாழ்க்கையை அற நெறிக்கு ஏற்ப வாழ்தவனுக்குத் தான். 

குறள் 49
அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

இல்லறம்ங்கிறது, என்னன்னா, எந்த விதமான பழிச் சொல்லுக்கும் இடம் கொடுக்காம வாழ்ற குடும்ப வாழ்க்கை தான். 

குறள் 52. 
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

ஒருத்தனுக்கு நல்ல குணமுள்ள பெஞ்சாதி கெடைக்கணும். அப்படி மட்டும் கெடைக்காட்டா, அந்த வாழ்க்கையில எவ்வளவு சிறப்பு இருந்தாலும், ஒரு பயனும் கெடையாது. 

(தொடரும்)



 



Post a Comment

0 Comments