Ticker

6/recent/ticker-posts

Ad Code



திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -27


குறள் 1173 
கதுமெனத் தாநோக்கித் 
தாமே கலுழும்  இதுநகத் 
தக்க துடைத்து. 

தேர்த்திருவிழா 
பார்க்கப் போயிருந்தேன்! 
பஞ்சுமிட்டாய் 
வாங்குற இடத்துல 
பழைய தோழிய 
இந்தக் கண்ணு 
பாக்கவச்சுச்சு! 
சிலஆண்டுகளுக்கு 
முன்னால் 
அவ்வளவு நெருக்கமா
இருந்தோம்! 
இப்ப அவளே 
பாத்தும் பாக்காத 
மாதிரி போயிட்டா! 
மனசு கனமாயிருச்சு! 
எந்தக் கண்கள் 
பாக்கவச்சதோ 
அதேகண்கள் 
அழத் தொடங்குது! 
இது நகைப்புக்குரியது தானே! 
கண்களும் வறண்டதே 

குறள் 1174 
பெயலாற்றா நீருலந்த உண்கண் 
உயலாற்றா  உய்வில்நோய் 
என்கண் நிறுத்து. 

கண்மணி! 
ஏம்மா சோகமா  
வாசல்ல உக்காந்திருக்க? 
பொன்மணி! 
எங்க தாத்தா 
நேத்து தூங்கிட்டே 
போனாரு! 
இன் ம் வரல! 
அப்படி நல்லா என்னோட 
பழகுவாரு கொஞ்சுவாரு! 
இந்தக்கண்கள்தான் 
காரணம் அதுக்கு! 
அதான் இந்த் பக்கமா 
பாத்துக்கிட்டே இருக்கேன்!
ஏக்கத்துல 
கண்கள்கூட அழமுடியாத 
அளவுக்கு 
வறண்டுபோச்சு! 

குறள் 1175 
படலாற்றா பைதல் உழக்கும் 
கடலாற்றாக்  காமநோய் 
செய்தஎன் கண். 

பள்ளியில் முதல்நாள்! 
புதுப்புது மாணவிகள் 
சேர்ந்திருந்தனர்! 
யார்யாரோ வந்தாலும் 
என்கவனத்தை ஈர்த்ததோ 
பாமதிதான்! 
கண்களுக்கு நன்றி சொன்னேன்! 
தோழியாகி 
உயிர்த்தோழியானோம்! 
அடுத்தநாள்  
பார்க்கவேண்டும் என்ற 
துடிப்பில் 
எந்தக்கண்கள் 
நட்பைப் படரவிட்டதோ 
அதேகண்கள் 
தூக்கமிழந்து வாடுகின்றன. 

(தொடரும்)


 



Post a Comment

0 Comments