Ticker

6/recent/ticker-posts

Ad Code



காதலிசம்!


வானத்தை பார்த்து
ஏங்குபவர்கள் மத்தியில்
துளித்துளியாய் என்னை
பயிர் செய்கிறாய்

குளம் நிரம்பியது
குட்டை நிரம்பியது
கல்லெறிந்து காணாத
எனது கடல் நிறையவில்லை

உண்மையாக சொன்னால்
காதலொரு வலி
அவள் மனதை செதுக்கியவனுக்கு
சிற்பியென பெயரிட்டது காதல்

உள்ளங்கையில் தாங்கிட
உனக்கும் எனக்கும் அவா
ஓயாமல் கனமேறிப்பொகிறது
கண்கள் கவரும் காதல்

உச்சிமுதல் பாதம்வரை
ஏதோ ஒரு சிலிர்ப்பு
நடக்கும் வழயெல்லாம்
அவளின் பூ மத்தியரேகையாகியதால்

காதலுக்கு கவிதையொரு
சொல்லப்படாத மொழி
வெறும் காகிதத்தை செழிப்பாக்கியது
ஒரேயொரு ஐ லவ் யு..!

சே கார்கவி கார்த்திக்


 



Post a Comment

0 Comments