Ticker

6/recent/ticker-posts

Ad Code



இலங்கையில் கடுமையாகும் கட்டுப்பாடு: மீறுவோருக்கு 50000 ரூபா தண்டப்பணம்

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரிசெலுத்துனர் அடையாள இலக்கத்தை (TIN Number) வைத்திருப்பது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையம் மூலம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிந்து இலக்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அரச விதிமுறைகளை மீறி பதிவு செய்யாதோருக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வருடாந்தம் 12 லட்சத்திற்கு மேலாக வருமானம் பெறும் ஒவ்வொருவரும் வரி செலுத்துவதற்கான பதிவை மேற்கொள்ள வேண்டும்.

பதிவு எண்ணைப் பெறுவதும் வரிக் கோப்புகளைத் திறப்பதும் தனித்துவமான செயல்முறைகள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை எண் இருக்கும் போது, உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் பதிவு எண் கட்டாயமாகும்.

தனிநபர்கள் வரிவிதிப்புக்கு பொறுப்பேற்க போதுமான வருமானம் இருந்தால் வருமான வரி செலுத்துவதற்கான கோப்பைத் திறப்பது அவசியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ibctamil


 



Post a Comment

0 Comments