மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி பல சாதனைகளைப் படைத்துள்ளது.கிட்டத்தட்ட15 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியில் விளையாடி வருகிறார் தோனி. 2007ம் நடைபெற்ற டி20 உலககோப்பையில் இந்தியா வெற்றிபெற்றதுக்கு முக்கிய காரணம் தோனியின் கேப்டன்ஸி தான்.
அதுமட்டுமல்லாது 2011ம் ஆண்டின் உலககோப்பை, 2013 சாம்பியன் ட்ராஃபி ஆகிய சர்வதேச போட்டிகளிலும் இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் தோனி. இதுவரை 350 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக்கொண்ட தோனி 10,773 ரன்களைக் குவித்துள்ளார். அதேபோல் 90 டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்களும், 98 டி20 போட்டிகளில் 1,617 ரன்களும் எடுத்துள்ளார்.
2010ம் ஆண்டிலிருந்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு கேப்டன்ஸி செய்து வரும் தோனி ஐந்து வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ளார்.விராட் கோலி ,ரோகித் ஷர்மா ஆகிய வீரர்களையும் இந்திய அணியில் நிரந்தர வீரராக மாற்றியது தோனிதான். எப்போது இளம் வீரர்களுக்கு வழிவிடுவது என்பதை நன்கு அறிந்து நடப்பவர் தோனி.
மேலும் தோனி ஒரு கேப்டனாக டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் 60 கிக்கெட்டுகள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் 200 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகளை எடுத்த கேப்டன் என்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
இதுவரை அனைத்து விதமான தொடர்களிலும் 332 போட்டிகளில் கேப்டன்ஸி செய்து அதிக கேப்டன்ஸி செய்த வீரர் என்ற சாதனையையும் படத்துள்ளார். அதேபோல் ஒரு டி20 போட்டியில் அதிக பந்துகளைப் பிடித்த வீரர் என்ற பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளார்.
தோனி தனது அட்டகாசமான விளையாட்டுகளின் மூலமும் தனது கேப்டன்ஸி மூலமும் இந்திய மக்களில் இதயத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார். அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தார் என்றே கூற வேண்டும்.
அந்தவகையில் அவருடைய 7 ஜெர்ஸி இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு உணர்வுப்பூர்வமாக மாறியது. ஜெர்ஸி 7 என்றால் அது தோனித்தான் என்று மனதில் பதியும் அளவிற்கு மாறிவிட்டது.
இதனைக் கருத்தில் கொண்ட பிசிசிஐ ஜெர்ஸி 7க்கு நிரந்தர ஓய்வு அளித்துள்ளது. அதாவது இனி கிரிக்கெட்டில் எந்த வீரர்களும் ஜெர்ஸி 7 ஐ அணிய முடியாது.
OFFICIAL :
— DHONIsm™ ❤️ (@DHONIism) December 15, 2023
MS Dhoni's jersey number 7 is officially retired from Indian cricket. 7️⃣🏏@MSDhoni #MSDhoni #WhistlePodu pic.twitter.com/qjLgBuCmpa
இதற்கு முன்னர் சச்சினுக்கு மரியாதை அளிக்கும் விதமாக ஜெர்ஸி 10 க்கு ஓய்வளித்தனர். இந்நிலையில் தோனியின் ஜெர்ஸி 7 க்கும் ஓய்வளித்தது சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
kalkionline
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments