சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தனது வாழ்க்கை குறித்தும் நிறுவனங்கள் எப்படி தொடங்கப்பட்டது என்பது குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அஜீத் சிங்.
அப்போது பேசிய அவர், “நான் விவசாய குடும்பத்திலிருந்து வந்தவன். மேற்கு உத்தரபிரதேசத்தில் என்னுடைய தாத்தா விவசாயியாக இருந்தார். விவசாய துறையில் என்னுடைய தந்தை ஆய்வு விஞ்ஞானியாக இருந்தார். நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே உத்தரப்பிரதேசத்தில்தான்” என்று தெரிவித்தார்.
ஐஐடி கான்பூரில் கெமிக்கல் இஞ்சீனியரிங்கை தேர்வு செய்த அஜீத் சிங், முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். அதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் எம்பிஏ முடித்த சிங், அமெரிக்காவிற்கு போவதற்கு முன்பு ஆறு வருடங்கள் வரை பெங்களூரில் பணியாற்றி வந்தார். அவரது குடும்பத்தில் முதல் இஞ்சினீயராக இருந்தாலும், தொழிலதிபராக வேண்டும் என்ற ஆசை அவருக்கு அப்போது இருந்திருக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.
“Honeywell நிறுவனத்தில் பணியாற்றிய போதுதான் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இந்நிறுவனத்தில் வேலை பார்ப்பது அலுத்து போய், ஆரக்கிள் நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கு வேலை பார்த்த போது, நாம் ஏன் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றக் கூடாது என்ற யோசனை வந்தது. அதனால் உடனடியாக ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் சேர்ந்தேன்” என்கிறார் சிங். ஆரம்பத்திலேயே பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்ததால், பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடிவதோடு பல திறமையானர்வளிடம் நட்புறவை வளர்த்துக்கொள்ள முடிவதாக கூறுகிறார் சிங்.
இவர் தொடங்கியுள்ள Nutanix மற்றும் ThoughtSpot நிறுவனங்களுக்கு பெங்களூருவிலும் அலுவலகம் உள்ளது. உலகளவில் 400-க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் இந்நிறுவனத்தில் 300 பேர் இந்தியாவின் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் திருவனந்தபுரத்தில் பணியாற்றி வருகின்றனர்.
“எங்கள் நிறுவனத்திற்கு தலைமையிடம் என்ற ஒன்றே கிடையாது. அப்படியொரு விஷயத்தையே நான் வெறுக்கிறேன். முக்கிய பணிகள் எல்லாம் தலைமை அலுவலகத்தில் தான் முடிவெடுக்கப்படும் என்ற எண்ணத்தை நான் மாற்ற நினைக்கிறேன்” எனக் கூறுகிறார் சிங். பணிபுரியும் காலத்தில் தான் பெற்ற அணுபவத்தின் மூலம், தனது நிறுவனத்திற்கான இணை நிறுவனர்களையோ, குழு உறுப்பினர்களையோ, முதலீட்டாளர்களையோ தேர்வு செய்யும் போது பகுத்தறிந்து செயல்படுகிறார் அஜீத் சிங்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments