Ticker

6/recent/ticker-posts

அமெரிக்க காங்கிரஸ் உதவிகளை ஒத்திவைத்தால் போரை இழக்கும் 'பெரிய ஆபத்தை' உக்ரைன் சந்திக்கும்!


காங்கிரசில் விவாதிக்கப்படும் கியிவ் (உக்ரைன்)மீதான அமெரிக்காவின் உதவியை ஒத்திவைப்பது ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் தோல்வியடையும் "பெரிய ஆபத்தை" உருவாக்கும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமை அதிகாரி செவ்வாயன்று தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடனான உக்ரைனின் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உதவிகள் குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக,வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமை அதிகாரி  Andriy Yermak தெரிவித்துள்ளார்.

உதவிகள்  ஒத்திவைக்கப்பட்டால், "நாம் மிகப் பெரிய இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படும்.," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திங்களன்று, வெள்ளை மாளிகை அதிகாரிகள், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவுவதற்கு அமெரிக்காவிற்கு நேரமும் பணமும் இல்லாமல் போய்விட்டதாகக்தெர்வித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஜனாதிபதி ஜோ பிடனின் நிர்வாகம், உக்ரைன், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க எல்லைப் பாதுகாப்பிற்கான  நிதியளிப்பதற்காக காங்கிரஸிடம் கிட்டத்தட்ட 106 பில்லியன் டாலர்களைக் கேட்டுள்ளது.



 



Post a Comment

0 Comments