எலக்ட்ரோலைட் சமநிலையைக் கட்டுப்படுத்தி இரத்தத்தில் இருந்து கழிவுகள் மற்றும் கூடுதல் திரவத்தை வடிகட்டும் வேலையை சிறுநீரகங்கள் செய்கின்றன.
இது ஆரோக்கியமாக இருந்தால் ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றது. போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் பொழுது இது சிறுநீரகத்தை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.
அந்த வகையில் சிறுநீரகத்தை பாதிக்கும் சில தவறான பழக்கங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
1. ஆஸ்பிரின் மற்றும் இப்யூபுரூஃபன் போன்ற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை (NSAID கள்) அடிக்கடி எடுத்து கொள்வதால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். மருத்துவ ஆலோசனையுடன் மருந்துகளை எடுத்து கொள்வது சிறந்தது.
2. ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு குடிக்காவிட்டால் சிறுநீரகம் பாதிக்கும். போதியளவு தண்ணீர் குடிக்காவிட்டால் சிறுநீர் உற்பத்தி குறைகிறது. இதனால் சிறுநீரக கற்கள் உருவாகலாம்.
3. அளவிற்கு அதிகமாக உப்பு சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இது சிறுநீரக நோய் அபாயத்தை ஏற்படுத்தும். உப்பை கட்டுபடுத்தி போதியளவிலான உப்பை எடுத்து கொள்ளவும்.
4. மருந்து பொருட்களை அதிகமாக எடுத்து கொள்ளல் மற்றும் முறையற்ற வாழ்க்கை முறை இவை இரண்டால் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் ஏற்படலாம்.
5. மது மற்றும் புகைத்தலால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும். அத்துடன் ஆல்கஹாலை அளவாக பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும்.
manithan
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments