Ticker

6/recent/ticker-posts

Ad Code

மனநல பிரச்சினைகளுக்கு செயற்கை நுண்ணறிவு தீர்வளிக்குமா..!

செயற்கை நுண்ணறிவு சமீப காலங்களில் பெரும்பாலான துறைகளில் அதீத செல்வாக்கு செலுத்தி வருகிறது.

செயற்கை நுண்ணறிவை பொருத்தவரை, அது தவறானவர்களின் கைக்குச் செல்லும் போது, ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் மாறிவிட வாய்ப்புண்டு.

 


சில ஆண்டுகளுக்கு முன் 'ப்ளூ வேல்' (Blue Whale) என்ற விளையாட்டு மூலம் என்ன நடந்தது என்பது நினைவிலிருக்கும்"

மாணவர்களின் வீட்டுப் பாடங்களை முடிப்பது, புதிய செயலிகளுக்கு codes உருவாக்குவது, கவிதை, கட்டுரை எழுதிக்கொடுப்பது, ஓவியம், புகைப்படங்கள் உருவாக்கிக் கொடுப்பது எனச் செயற்கை நுண்ணறிவு (AI) மனித வாழ்க்கையை மிகவும் எளிதாக்கி சுவாரஸ்யமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு

இப்போது அதே செயற்கை நுண்ணறிவு, மருத்துவத்திலும் கோலூன்றி வருகிறது என நிபுணர்கள் ஆச்சரியத்துடன் தெரிவிக்கிறார்கள்.

உடலில் என்ன பிரச்சினை வந்தாலும், அதை முதலில் கூகுளில் தேடிப்பார்க்கும் பழக்கம் மனிதர்களிடம் உண்டு.

கூகுள் சொல்லும் சிகிச்சையை முயற்சி செய்த பின்னரும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாத போதுதான் மருத்துவரிடம் செல்கின்றனர். இதுவே ஆபத்தான ஒன்றுதான்.

அடுத்தபடியாக, இப்போது மனநல பிரச்சினைகளுக்கும் கூகுளைத் தாண்டி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உதாரணமாக மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு இருப்பதை செயற்கை நுண்ணறிவிடம் தெரிவித்ததும், அது பிரச்சினையை பொறுமையாகக் கேட்டுக் கொள்கிறது.

நேரடி உரையாடல்

ஒவ்வொரு கேள்வியாக அன்போடு கேட்டு, நிலைமையைப் புரிந்துகொண்டதும், குறித்த சிக்கலை எப்படிக் கையாளலாம் என்று சில வழிமுறைகளைக் கொடுக்கிறது.

ஏற்கெனவே பல செயலிகள், மக்கள் தினம் தினம் சந்திக்கும் மன அழுத்தத்தைப் போக்க சில வழிகளையும், ஒட்டுமொத்த மனநல ஆரோக்கியத்திற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றன.

ஆனால், இப்போதுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு மருத்துவர்கள், நேராக மனிதர்களோடு உரையாடி அவர்களுக்கு ஆலோசனை வழங்குமளவுக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

tamilwin


 



Post a Comment

0 Comments