Ticker

6/recent/ticker-posts

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை  விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இரண்டாவது நாளாக (01)  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான ஜெரோம் பெர்னாண்டோவை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பௌத்தம் உள்ளிட்ட மதங்களை இழிவுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சில மாதங்களாக வௌிநாட்டில் இருந்து நாடு திரும்பிய ஜெரோம் பெர்னாண்டோ  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 



Post a Comment

0 Comments