ஹவுத்தி தாக்குதல்களின் பின்னணியில் ஈரான்!- அமெரிக்கா குற்றச்சாட்டு

ஹவுத்தி தாக்குதல்களின் பின்னணியில் ஈரான்!- அமெரிக்கா குற்றச்சாட்டு


செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களின் பின்னணியில்  ஈரான் சம்பந்தப் பட்டிருப்பதாக அமேரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

"யேமன் கிளர்ச்சிக் குழுவிற்கு ஈரான் ஆயுதங்கள் மற்றும் போர் நுணுக்கங்களையும் வழங்குகின்றது. மேலும் செங்கடலில் வணிகக் கப்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் திட்டமிடுவதில் ஈரான் ஆழமாக ஈடுபட்டுள்ளது என்பதையும்  நாங்கள் அறிவோம்.மேலும்  ஹவுத்தி குழுவுக்கு ஆயுதங்களையும்,பொருளாதார உதவிகளையும் ஈரான் வளங்கி தாக்குதலுக்கு ஊக்கமளிக்கின்றது.  "என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஹூதி தாக்குதல்களால் உலக வர்த்தகத்தின் பெரும் பகுதி பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 

இத்தாலிய-சுவிஸ் நிறுவனமான மெடிடரேனியன் ஷிப்பிங் கம்பெனி, பிரான்சின் CMA CGM மற்றும் டென்மார்க்கின் AP Moller-Maersk உட்பட ஒரு டஜன் கப்பல் நிறுவனங்கள் தாக்குதல்களால் செங்கடல் வழியாக போக்குவரத்தை நிறுத்தியுள்ளது குறிப்பிடத் தக்கது..


 



Post a Comment

Previous Post Next Post