குடும்பங்களில் பிளவை ஏற்படுத்தும் பிரித்தானியாவின் புதிய புலம்பெயர்தல் விதி: எதிர்த்து நீதிமன்றம் செல்ல திட்டம்

குடும்பங்களில் பிளவை ஏற்படுத்தும் பிரித்தானியாவின் புதிய புலம்பெயர்தல் விதி: எதிர்த்து நீதிமன்றம் செல்ல திட்டம்

பிரித்தானியா அறிமுகம் செய்யவிருக்கும் புதிய புலம்பெயர்தல் விதிகளில் ஒன்று, குடும்பங்களில் பிளவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, தொண்டு நிறுவனம் ஒன்று அந்த விதியை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளது.

பிரித்தானியா அறிமுகம் செய்யவிருக்கும் புதிய புலம்பெயர்தல் விதிகளில் ஒன்று, ஆண்டொன்றிற்கு 38,700 பவுண்டுகள் வருவாய் உள்ளவர்கள் மட்டுமே, பிரித்தானியர்கள் அல்லாத தங்கள் குடும்பத்தினரை, அதாவது, கணவன் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளைக் கூட, தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளமுடியும் என்கிறது.

இந்த செய்தி தங்களுக்கு கடும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள், பிரித்தானியர்களல்லாத தங்கள் குடும்பத்தினருடன் பிரித்தானியாவில் வாழ்பவர்கள். அப்படியானால், அவர்கள் பிரித்தானியரல்லாத தங்கள் குடும்பத்தினரை அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடவேண்டுமா என்னும் கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில், Reunite Families என்னும் புலம்பெயர்ந்தோர் ஆதரவு தொண்டு நிறுவனம், குடும்பங்களில் பிளவை ஏற்படுத்தக்கூடிய இந்த விதியை சட்டப்படி எதிர்கொள்ளுமாறு, Leigh Day என்னும் சட்ட அமைப்பைக் கோரியுள்ளது.

இதற்கிடையில், உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லியிடம், 38,700 பவுண்டுகளுக்குக் குறைவான வருவாய் உள்ளவர்கள், பிரித்தானியரல்லாத தங்கள் குடும்பத்தினரை அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடவேண்டுமா என்னும் கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜேம்ஸ், இது அடுத்த கட்டம் குறித்த விடயம், அதாவது, எதிர்காலம் குறித்த விடயமேயொழிய பின்னோக்கிச் செல்லும் விடயம் அல்ல என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

lankasri



 



Post a Comment

Previous Post Next Post