ஐசிசி மாதிரி ஒரு கேடு கெட்ட நயவஞ்சக அமைப்பை பார்த்தது இல்லை.. கவாஜா விவகாரத்தில் ஜாம்பவான் கருத்து

ஐசிசி மாதிரி ஒரு கேடு கெட்ட நயவஞ்சக அமைப்பை பார்த்தது இல்லை.. கவாஜா விவகாரத்தில் ஜாம்பவான் கருத்து

மும்பை : ஐசிசி மாதிரி ஒரு கேடுகெட்ட நயவஞ்சக அமைப்பை தாம் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் கடுமையாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடைபெறும் போரில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் பாலத்தின் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தியும் அனைத்து உயிர்களுமே சமம் தான் என்று வாசகத்தை உஸ்மான் கவஜா தனது ஷூவில் எழுதியிருந்தார்.

எனினும் இதற்கு ஐசிசி அனுமதி அளிக்கவில்லை. இது அரசியல் சம்பந்தமான வார்த்தை என்று கூறி ஐசிசி தடை போட்டது. இந்த நிலையில் உலகத்தில் அமைதி நிலவு வேண்டும் என்பதற்காக அமைதி புறா வடிவிலான ஸ்டிக்கரை தனது பேட்டில் கவாஜா ஒட்டியிருந்தார். அதற்கும் ஐசிசி தற்போது தடை விதித்து இருக்கிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் ஐசிசி யின் நடவடிக்கை தமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் அளிப்பதாக கூறியுள்ளார்.இது தொடர்பாக பேசிய அவர் இதுவே வேறு ஒரு விளையாட்டு அமைப்பாக இருந்தால் அனைத்து விஷயங்களுக்கும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்தில் தங்களுடைய குரலை கொடுப்பார்கள். ஆனால் ஐசிசி தன்னுடைய நயவஞ்சகத்தனத்தையும் எது சரியோ அதற்கு துணை நிற்கும் தன்மையும் இழந்து நிற்கிறது.

ஐசிசி தன்னுடைய விதிகளில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த விஷயங்களுக்கும் மற்றும் நிற வெறி தொடர்பான எதற்குமே அனுமதி அளிக்கக்கூடாது என்று கூறி இருக்கிறது. அப்படி இருக்கும்போது கருப்பின மக்களுக்காக ஆதரவு இயக்கத்தை ஐசிசி நடத்தியது ஏன்? ஒரு இன சேர்க்கையாளர்களுக்காக கிரிக்கெட் ஸ்டெம்பின் நிறத்தை வானவில் கலராக மாற்றியது ஏன்?

இதற்கு குரல் கொடுக்கும் ஐசிசி ஏன் உஸ்மான் கவஜா செய்யும் விஷயத்திற்கு தடை போடுகிறது. இதில் கொஞ்சமாவது நியாயம் இருக்கிறதா என்று மைக்கில் ஹோல்டிங் சாடியிருக்கிறார்.

mykhel


 



Post a Comment

Previous Post Next Post