இலங்கைக்கு அருகே பாரிய நிலநடுக்கம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை

இலங்கைக்கு அருகே பாரிய நிலநடுக்கம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை

இலங்கையை அண்மித்த இந்தியப் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் 6.6 ரிச்டர் அளவில் இன்று (30) காலை 10.49 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.

இதனால் நாட்டைச் சூழவுள்ள கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் நேற்று மாலைத்தீவுக்கு அருகில் இரு நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியிருந்ததாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேனா தெரிவித்திருந்தார்.

மேலும் இதற்கு முன்னதாக, ரிக்டர் அளவுகோலில் 4.8, 5.2 மற்றும் 5.8 என 3 நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்திருந்தது.

தற்போது கரையோர மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

ibctamil


 



Post a Comment

Previous Post Next Post