டாக்கா: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் அனுபவ வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம் ஃபீல்டிங்கை தொந்தரவு செய்த காரணத்திற்காக நடுவர்களால் அவுட் கொடுக்கப்பட்டுள்ளார்.
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை வங்கதேசம் வீழ்த்தி அசத்திய நிலையில், 2வது டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷான்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் வங்கதேச அணி 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது அனுபவ வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம் களமிறங்கினார். இவரும் ஷகதத் ஹொசைன் கூட்டணி இணைந்து வங்கதேச அணியின் ஸ்கோர உயர்த்தியது. இந்த நிலையில் 35 ரன்கள் எடுத்திருந்த போது, ஜேமின்சன் பந்துவீச அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 4வது பந்தை ஜேமிசன் சரியான லெந்தில் பிட்ச் செய்து கொஞ்சன் ஸ்டம்பிற்கு மேல் வீசினார். அதனை சரியாக கணித்து முஷ்ஃபிகுர் ரஹிம் பேட்டை கொண்டு தடுத்தார்.
அந்த பந்து க்ரீஸிலேயே பிட்சாகி கொஞ்சம் விலகி சென்றது. ஆனால் அந்த பந்தை தேடி சென்று கையால் தள்ளிவிட்டார் முஷ்ஃபிகுர் ரஹிம். இதனைத் தொடர்ந்து நடுவர்களிடம் அவுட் கோரி நியூசிலாந்து வீரர்கள் கோஷமிட்டனர். இதன்பின் நடுவர்கள் மூன்றாம் நடுவரிடம் விவகாரத்தை கொண்டு சென்றவர். அப்போது ஃபீல்டிங்கை தொந்தரவு செய்ததன் காரணமாக முஷ்ஃபிகுர் ரஹிமிற்கு அவுட் வழங்கப்பட்டது. இதனால் ரஹிம் 35 ரன்களில் பரிதாபமாக வெளியேறினார். இதுபோல் ஆட்டமிழந்த முதல் வங்கதேச வீரர் என்ற மோசமான சாதனையையும் முஷ்ஃபிகுர் ரஹிம் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் இவ்வகையான ஆட்டமிழந்த 11வது வீரர் என்ற பெருமையையும் ரஹிம் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பாக இந்தியாவின் மொஹிந்தர் அமர்நாத், மோசின் கான், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் உள்ளிட்டோர் இதேபோல் ஆட்டமிழந்தனர். இதன்பின் வந்த வங்கதேச அணி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அந்த அணி 154 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. ஸ்பின்னர்களுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால், நியூசிலாந்து அணி பிலிப்ஸ், சான்ட்னர் மற்றும் அஜாஸ் படேலுடன் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
mykhel
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
விளையாட்டு