இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் நிராகரித்தது!

இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் நிராகரித்தது!


எகிப்திய அதிகாரிகளை மேற்கோள் காட்டி தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் அறிக்கையின்படி , டஜன் கணக்கான கைதிகளுக்கு ஈடாக ஒரு வாரத்திற்கு சண்டையை நிறுத்துவதற்கான இஸ்ரேலிய கோரிக்கையை  ஹமாஸ் நிராகரித்ததாகக் தெரிவித்துள்ளது..

ஹமாஸின் அரசியல் பணியகத்தின் உறுப்பினர் இஸ்மாயில் ஹனியே புதனன்று மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்காக   எகிப்துக்குப் பயணம் செய்தார். 

இந்நிலையில் ஹமாஸ் அதிகாரி காசி ஹமாத் போர் நிறுத்தம் தொடர்பாக தெரிவிக்கையில்  "நிரந்தரப் போர் நிறுத்தம் இல்லாமல் எந்தவித உடன்படிக்கைக்கும் நாம் தயாரில்லை 'என்று தெரிவித்துள்ளார்.

"நாங்கள் மிகவும் தெளிவாக உள்ளோம்.நாங்கள் ஆக்கிரமிப்பை நிறுத்த விரும்புகிறோம்,ஆனால் இஸ்ரேல் பொது மக்கள் மீது நடாத்துகின்ற கொடூரத் தாக்குதலை நிறுத்துவதாக இல்லை .எங்கள் நிலத்தில் இஸ்ரேலிய ராணுவம் மிக மோசமான பேரழிவை நடாத்துகின்றது." என்றும் ஹமாத் தெரிவித்துள்ளார்.

ஹமாஸின் அரசியல் பணியகத்தின் உறுப்பினர், இஸ்மாயில் ஹனியே கருத்துத் தெரிவிக்கையில் "சிலர்" சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு சண்டையில் இடைநிறுத்தங்களை எதிர்பார்க்கிறார்கள், ஆனால் எமது போராளிகள்  அதற்கு உடன்பட மாட்டார்கள்' என்று கூறினார்.

"போர் நிறுத்தத்திற்குப் பின் மீண்டும் எங்கள் மக்கள் மீது தாக்குதல் நடாத்துவார்கள்.இஸ்ரேலின் இந்த விளையாட்டுக்கு இனி ஒருபோதும் நாம் இணங்க மாட்டோம் "என்றும் இஸ்மாயில் ஹனியே தெரிவித்துள்ளார்.


 



Post a Comment

Previous Post Next Post