நிம்மதி!

நிம்மதி!


கோயில், குளம் சுத்தி வந்து,
குலசாமிக்கு பொங்கல் வச்சி,
மண் சோறு தின்னுப்புட்டு,
மடிப்பிச்சை ஏந்திக்கிட்டு,
தவமாக..தவமிருந்து 
தரிச்சது முதல் புள்ள;

சந்தோசத்துக்கு அளவு இல்ல;
சந்தான பாக்யத்துக்கு ஏது எல்ல?
பையனும் வளர்ந்து விட்டான்
பள்ளிக்கூடம் போயி வந்தான்.
தோளுக்கு மேல ஒசந்து விட்டான்.
தோழர்களோட சேர்ந்துகிட்டான்.

வயசாகி போனா என்ன.
வளர்த்த புள்ள பார்க்குமின்னு
நெனப்பு தான் வீணா போச்சி
நெஞ்சிலதான் வலியுமாச்சு
பொழுது விடிஞ்சி பொழுது போனா
போதையைதான் ஏத்திக்கிட்டான்.

வேண்டாத பழக்கமெல்லாம்
வீடு தேடி வந்ததால
புள்ளையால சந்தோசம் போச்சி!
பயிர் நெலம் கைமாறிடிச்சி
வம்சவிருத்திக்கு பையன் வேணும்
வாரிசுகள் தழைக்க வேணும்னு

போட்டக் கணக்கு எல்லாம்
பொழுது விடியாம போயிடிச்சி...
ஆணுன்னு, பொண்ணு இன்னு
ஆசைய வளர்த்துக்கிடாம
இவ்வளவுதான் நமக்குன்னு
இருந்திட்டா தொல்லையில்ல;

"சோழா "புகழேந்தி
109/4 வினாயகர்  கோவில் வீதி
கரியமாணிக்கம் அஞ்சல்
விழுப்புரம் மாவட்டம்
தமிழ்நாடு
அலைபேசி: 70949 14328


 



Post a Comment

Previous Post Next Post