திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-120

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-120


குறள் 73.
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

எப்பிடி நம்ம உசிரும் ஒடம்பும் சேந்திருக்கோ, அது போல தான், நாம வாழ்ற வாழ்க்கையில அன்பும் சேந்திருக்கணும். 

குறள் 76. 
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

வீரமா நடக்கதுக்கும் அன்பு தேவை. இது தெரியாதவனுவொ தான், நல்லது செய்யதுக்கு மட்டுமே அன்பு தேவைன்னு தப்பா சொல்லுவானுவொ. 

குறள் 79
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

மனசுக்குள்ள  அன்புங்கிறது இல்லாதவனுவொளுக்கு, ஒடம்புல வெளிய தெரியுத உறுப்புக்கள் எம்புட்டு அழகா இருந்தாலும் ஒரு பிரயோசனும் இல்லை. 

குறள் 80.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

ஒருத்தங்கிட்ட அன்புங்கிற கொணம் இருந்தாத்தான், அவன் ஒடம்பு உசுரோட இருக்கதா சொல்லலாம். அன்பு இல்லாம இருந்தா அவனோட ஒடம்பு எலும்புத் தோல் வச்சு மூடி இருக்க வெத்து ஒடம்பு மட்டுந் தான். 

குறள் 81. 
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

வீட்ல இருந்துகிட்டு, சொத்து பத்துல்லாம் சேர்த்து, அதுகளை பாதுகாத்து வைக்கதுல்லாம் எதுக்கு  தெரியுமா? விருந்தாளுங்களை வரவழைச்சு அவங்களுக்கு ஒதவுவதுக்குத் தான். 

(தொடரும்)


 



Post a Comment

Previous Post Next Post