சர்வதேச அரபு மொழி தினம்

சர்வதேச அரபு மொழி தினம்


சர்வதேச அரபு மொழி தினத்தை முன்னிட்டு ஹெம்மாதகம ஸஹ்ரிய்யா அரபுக்கல்லூரி, நிகழ்நிலைக் கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

அரபு மொழியை இரண்டாம் மொழியாக கற்பிப்பதில் பல வருட அனுபவம் வாய்ந்த வளவாளர்கள் குறித்த அமர்வில் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்கவுள்ள இந்நிகழ்வு எதிர்வரும் 2023 டிசம்பர்,19ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின்  மாணவர் விவகாரத்  துணைமுதல்வரும், அரபுமொழி மற்றும் இலக்கியத்துறைப் பேராசிரியருமான கலாநிதி அக்மல் ஹுஸைரி மற்றும் தாய்லாந்து அமீர், சோன்கலா பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் பீட விரிவுரையாளரும் துறைசார் வெளிநாட்டு நிபுணருமான,கலாநிதி பீ. எம்.எம். இர்ஃபான் அவர்களும் வளவாளர்களாக கலந்து கொள்ள உள்ளனர். 

கருத்தரங்கில், இஸ்லாமிய கல்வி நிலையங்களின் விரிவுரையாளர்கள், மார்க்க போதகர்ககள் மற்றும் அரபு மொழி கற்பதில் ஆர்வம் கொண்டவர்கள் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர். 

Join Zoom Meeting:
Meeting ID: 995 9737 3181
Passcode: ZAC123



 



Post a Comment

Previous Post Next Post