சிஎஸ்கே vs மும்பை.. பதிரானா வரலைனா என்ன.. மலிங்கா மாதிரியே துஷாரா இருக்காரு.. இனிதான் சம்பவம்!

மும்பை: சென்னை அணிக்காக ஜூனியர் மலிங்கா என்று பார்க்கப்பட்டு வரும் பதிரானா விளையாடி வரும் நிலையில், மலிங்காவை போலவே பந்துவீசும் நூவன் துஷாராவை மும்பை அணி வாங்கியுள்ளது.

சிஎஸ்கே அணியின் செல்லப் பிள்ளையான பதிரானா சில நாட்களுக்கு முன், விஸ்வாசத்தை பணத்தால் வாங்க முடியாது என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதனால் மும்பை அணி தரப்பில் நேரடியாக பதிரானா அணுகப்பட்டதாக ரசிகர்களிடையே விவாதங்கள் எழுந்தது. இந்த நிலையில் துபாயில் நடைபெற்ற மினி ஏலத்தில் மும்பை அணி தரப்பில் மிகச்சிறந்த வீரர்கள் வாங்கப்பட்டுள்ளனர்.

ஜெரால்ட் கோட்சியே, ஸ்ரேயாஸ் கோபால், மதுஷங்கா உள்ளிட்டோர் முதல் சில மணி நேரங்களில் வாங்கியது. அதன்பின் நீண்ட நேரமாக அமைதி காத்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணி திடீரென இலங்கை அணியின் நூவன் துஷாரா பெயரினை அறிவித்த போது சுறுசிறுப்பானது. கிட்டத்தட்ட மலிங்காவை போலே பவுலிங் செய்யும் துஷாராவை வாங்க மும்பை அணி முயற்சித்தது தெரிந்தது.

அப்போது டெல்லி, லக்னோ உள்ளிட்ட அணிகள் துஷாராவை வாங்க முயற்சித்தன. ஆனால் துஷாராவை வாங்குவதில் தீவிரமாக இருந்த மும்பை அணி அவரை ரூ.4.80 கோடிக்கு வாங்கியது. துஷாராவை வாங்குவதற்கு மலிங்கா மற்றும் ஜெயவர்தனே ஆகிய இருவரும் காரணமாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் மலிங்காவிற்கு கீழ் துஷாராவை பட்டை தீட்ட முடியும் என்பதால், அவரை ஜூனியர் மலிங்காவாக பயன்படுத்த மும்பை அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பதிரானாவை வைத்து சிஎஸ்கே அணி அடைந்த வெற்றியே மும்பை அணி துஷாராவை தேடி செல்வதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் களத்தில் மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையில் மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. பதிரானா எளிதாக 145 கிமீ வேகத்திற்கும் அதிகமாக வீசும் திறமை கொண்டுள்ள நிலையில், துஷாரா 136 கிமீ வேகத்தை கடக்க முடியாமல் திணறி வருவதும் பேசுபொருளாகியுள்ளது.

mykhel

Post a Comment

Previous Post Next Post